Monday, March 1, 2010

கதை கேளு.. கதை கேளு!

நேத்துல இருந்து  ஒரே வயிறு வலி...ஒரு வேல நேத்து சிக்கன் நாலு பீஸ் அதிகமா சாப்டோமே அதனால இருக்குமோ..இல்ல ஆபீஸ்ல சிக்கன் ப்ரயிட் ரைஸ் சாப்டோமே அதனால இருக்குமோன்னு...யோசிச்சுக்கிட்டு  தொலைகாட்சியில  "சமையல் சமையல்" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்த நேரம்.. என் அக்கா (என்னுடைய நாத்தனாரை அக்கா என்று அழைப்பேன்.  சனிக்கிழமை பள்ளி விடுமுறை, அதனால பசங்கள கூட்டிகிட்டு வந்திருந்தாங்க.)  டப்புன்னு  தலைல ஒரு தட்டு தட்டி என்னமா  எவளோ நேரமா கூப்பிடறேன்...காது கேக்கலையா? என்றார்.

 ...ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னு இங்க வந்தா தொல்லையா இருக்கே..."

செல்லம்..(ஓவர் பாசம் வந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க) கிச்சன்ல நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குது....நீ தான் ஏதேதோ எழுதுவியாம்ல! அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..

என்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் "அத்தை எதுனா கதை சொல்லுவாங்க . அப்படியே தூங்கிடனும். சரியா" என்றபடி கிச்சன்னுக்குள்  சென்றுவிட்டார்.

இப்போதானே என்னோட வாண்டுகள கஷ்டப்பட்டு தூங்க வச்சேன்...மறுபடியுமா கஷ்ட காலம்'ன்னு மோனங்கிகிட்டே...
என்ன கதை சொல்வது?? நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது? ..நானே பெருமைக்கு எப்போவாச்சும் பில்ட் அப் குடுத்திருப்பேன் போல..ம்ம் .. யோசிச்சிட்டே இருந்த என்னை..
கத சொல்லுங்க அத்தை என்றான் பவிக்...

மனதை தேத்திக் கொண்டு.. என்னுடைய வலையில் எழுதுவதற்காக  ஒரு சிறுகதை ஒன்றை கற்பனை செய்து வைத்திருந்தேன்...அந்த கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. 
ரெண்டு பேரும் என்னை மொரைகிறாங்க....

பவிக்: போங்க அத்தை கதை ரொம்ப பழசு ...

"சரி சரி...ஒரு ஊர்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி  இருந்தாராம் . 
விஷால்: ரஜினி வேணாம் அத்தை சூர்யா....

சரி...சூர்யா இருந்தானாம்...அவனோட தோட்டத்துல மாம்பழ செடி வச்சானாம், செடி மரமாச்சாம்....ஆனா ஒரு மாங்காய் கூட வந்ததே இல்லையாம்.

பவிக்: தண்ணி ஊத்தலியா அத்தை?

"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா"

விஷால்: "சரி நீங்க சொல்லுங்க அத்தை " 

சூர்யா ஒரு நாளு தோட்டத்துக்கு போனானாம்...போனவனுக்கு பயங்கர அதிர்ச்சி..

பவிக்: "பூதம் வந்துச்சா அத்தை "

"இங்கபாரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா அத்தைக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்"

"ஓய்ய்" கிச்சனிலிருந்து அக்கா குரல்....

"விடமாட்டாங்களே...சரி..

அவனோட மாம்பழ மரத்துல நிறைய மாம்பழம் இருந்துச்சாம்.ஆனா அவன் ஒ
ரு பழங்ககூட சாப்பிடல.

பவிக்: "ஏன் அத்தை அவனுக்கு எட்டலியா?

"ஸ்ஸ்ஸ்ப்பா"

பவிக்: "சரி சொல்லுங்க. நான் இனிமே பேசமாட்டேன்" 

"அப்புறமா ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பழம் பரிச்சு சாப்பிட்டு பாத்தானாம், பழம் சூப்பரா இருந்துச்சாம்"

பவிக்: "சூப்பரான்னா?"

"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் மரத்துல பழம் பறிக்க ஆரம்பிச்சாங்களாம்.  எல்லாரும் பழம் பரிச்சுடுராங்கலேன்னு நெனச்சு அவனோட மரத்தை சுத்தி வேளி போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்.."

விஷால்: "ஒரு நாளு..."

"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா வேளி எல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். சரின்னு மறுபடியும்  வேளியை  சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப வேளி உடைஞ்சு கிடக்குதாம்."

பவிக்: "ஏன் அத்தை உடைஞ்சு போச்சு?" 

விஷால் : "ஏய் அது ஸ்டாராங்கா இல்லடா . இல்ல அத்தை?"

"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்?.

ஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு
வேளியை சரி செஞ்சுட்டு.. .."

விஷால் : "காலையில பார்த்தா வேளி உடைஞ்சு கிடக்குதாம்" 

"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் அத்தை சொல்றேன்ல.....

அன்னைக்கு வேளியை சரி பண்ணிகிட்டு ராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு "திபு திபு திபு திபு"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய யானை இறங்கி ஓடி வந்துச்சாம். "

பவிக் : "பெரிய யானையா அத்தை" 

"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம்ப  பெருசாம். அதோட வாலு  ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்."

விஷால்: "டேய் பவிக் இவ்ளோ பெருசா இருக்கும்டா" கையை முடிந்த மட்டும் விரிக்கிறான் விஷால்.

பவிக்: "இல்லடா அது நம்ம ஸ்கூல் விட பெருசா இருக்கும் தெரியுமா"

"அத்தை இங்க பாருங்க அத்தை  ஸ்கூல் விட பெருசா எங்கன்னா யானை  இருக்குமா?ஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்" சிரிக்கிறான் விஷால்.

விஷால் : "அத்தை நேத்து டிவி'ல டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு.."

"டாய் அத்தை கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம்.
அந்த யானை வேளியை உடைச்சு வந்து மாம்பழம் எல்லாத்தையும் சாபட்டுச்சாம்.  

 பவிக் :  கொட்டையோடவா அத்தை ?


ஸ்ப்பா....டேய் கதைய கேளுடா முதல்ல..   
 
அத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த யானை நிலாவுக்கு நேரா போச்சாம்"

"செல்லம்... அந்த யானை திரும்பி பாக்கல" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.

அக்கா: "சீக்கிரம் சொல்லுடா. எனக்கு வேலை இருக்கு"

"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்றீங்க ?"

அக்கா: "அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு" என்றார் அக்கா...

"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.

பவிக் : "வைடூரியம்ன்னா என்ன அத்தை?" 

"சரி கிண்டர் ஜாய், குர்குரே, டைரி மில்க், லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து யானை கிளம்பும் போது திரும்பி வந்தானாம்.

ஆனா அன்னைக்கு இவனை காணாம அவன் பொண்டாட்டி ஜோதிகா  ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பொண்ணுக்கு கிண்டர் ஜாய்யும்
  ,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.

எப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா?"
"ம்ம் புரியுது அத்தை" கோரஸ்...

"ஜோதிகாவும் , அவங்க பொண்ணு தியாவும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் சூர்யா. அப்புறம் ஜோதிகா தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு, எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க.. இவளும் யார்கிட்டயும் சொல்லாதேன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு"

அக்கா: "அய்யய்யோ..."

"என்ன அய்யய்யோ......உள்ள போயி வேலைய பாருங்க" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.

"மறுநாள் சூர்யா.. பொண்டாட்டி ஜோதிகாவுடனும்  பொண்ணு தியாவுடனும்  பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த யானை "திபு திபு திபு திபு"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் யானையோட வாலை பிடிக்க,அவன் கால அவனோட பொண்ணு  புடிக்க, அவளோட பொண்ணு கால அவளோட அம்மா புடிக்க , அவங்களோட கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்"

பவிக்: "காலு வலிக்காதா அத்தை ?"

"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா.....

"அப்ப அவனோட பொண்ணு தியா  "அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு" கேட்டாளா , அதுக்கு  "இல்லடா ஸ்வீடி ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு" அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டா அவனோட பொண்ணு . அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க"

பவிக் : "எப்படி அத்தை செத்து போனாங்க"

"அதான் டா யானை வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும், எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க"

விஷால்: "அப்புறம் என்னாச்சு அத்தை " 

"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது"

ம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அக்கா: ஏய்ய்ய்... எழுந்திருங்க உங்க அத்தைக்கு தான் எந்த வேலவெட்டியும்  இல்லை.. ஏதோ ஒலரிக்கிட்டு  இருகாங்கன்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திரிங்கடா  போய் கண்ண மூடி படுங்க போங்க  கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன்.

அவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...

நம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு???.......அவ்வ்வ்வ்வ்வ்....டோடல் டாமேஜ்!!!!

(நண்பர் ஒருவரின் வலைப்பதிவு படித்து அந்த ஸ்டைலில் நான் முயற்சி செய்தது) 

14 comments:

 1. Itha padikkum pothu enakku thondria mudhal vishayam, ungalukku thamila erukkira aarvamum kaadhalum thaan.

  Blog na serius/global ana oru vishayam pathi than pesanum nu ila.. Entha vishayathayum swarasyama sola mudinchathu na athu ok...

  Appuram, ungal vetla nadanthatha sollapadum intha katchi unmaya ila karpanaya nu ooruthiya theriyala. Aana, neenga eluthiya vitham intha katchiya unarvupoorvamakkuthu. Yen solrena, nan intha blog a padikkum pothu Yennala vishuala neenga katha sonna katchiya feel panna mudinchuthu.

  Yenna porutha varaikkum, Ithaye unga blog oda vetri nu solalam...

  Mothathil enala intha blog article a rasikka mudinthathu...

  ReplyDelete
 2. Hey...thanx sundar...for ur valuable comments..

  Idhu unmaiyaa nadandhahu dhaan...aana adhula konjam masala pottu eludhinen...blogaa swarasya padutharadhuku...

  Thax again...

  ReplyDelete
 3. அம்மிணி
  நம்மகூட பழகிட்டு இந்த காத்து கூட அடிக்கலன்ன எப்படி?
  நீங்க தான் எழுதிநீங்கன்னு நான் இன்னமும் நம்பள.
  யாரோ எழுதின மாதிரி இருக்கு...அதன் ரொம்ப நல்ல இருக்கு.
  Keep it up.

  ReplyDelete
 4. சான்சே இல்ல ஆஷித .......
  கதையோட கிளைமாக்ஸ் வரதுகுலேயும் நான் ஒரு குழந்தையாவே மாறிட்டேன் ...
  எல்லாருக்கும் இதே மாதுரி ஒரு பீலிங்க்ஸ் வரும்னு நினைக்குறேன்.......

  ஆல் தி பெஸ்ட்.
  friendly Sujatha

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. ஆஹா நல்லா தான் கதை சொல்றீங்க :) நல்லா வந்திருக்குங்க. நிறைய இடத்துல வாய்விட்டு சிரிச்சுட்டேன். அதுவும் யானை கொட்டையோட மாம்பழத்தை சாப்பிடுறது சான்ஸே இல்ல :))))

  தொடர்ந்து எழுதுங்க :)

  ReplyDelete
 8. :)

  நல்லா இருக்குங்க.. நீங்க குறிப்பிட்ட அந்த வலைப்பதிவையும் நான் வாசிச்சிருந்தேன். அவரும் இயல்பா கதை சொல்ல முயற்சி செஞ்சிருந்தார்.

  ReplyDelete
 9. //☀நான் ஆதவன்☀ said...

  ஆஹா நல்லா தான் கதை சொல்றீங்க :) நல்லா வந்திருக்குங்க. நிறைய இடத்துல வாய்விட்டு சிரிச்சுட்டேன். அதுவும் யானை கொட்டையோட மாம்பழத்தை சாப்பிடுறது சான்ஸே இல்ல :))))

  தொடர்ந்து எழுதுங்க :)//

  நன்றி ஆதவன்...

  ReplyDelete
 10. Konjam lengtha ah iruku ashitha...

  Ravi

  ReplyDelete
 11. நான் இந்த கதையை சிறுவர் மலர் புக்ல ஏற்கனவே படிச்சிட்டேன்....
  ஆனாலும் உங்களோட கதை சொல்லுற ஸ்டைலில் அசந்து போய்ட்டேன்....
  கீப் இட் அப்
  தொடர்ந்து எழுதுங்க :)

  ReplyDelete
 12. "பேராசை பேரு நஷ்டம்" இதை உணர்த்துது உங்கள் கதை ............. மிகவும் அருமை ............ வாழ்த்துக்கள்.........

  by : Selvam.

  ReplyDelete