Monday, March 1, 2010

யார் நீ...?

யார் நீ...?

நம்மை அறிமுகபடுத்தியது என்ன உறவு?
காதலா. .. ஈர்ப்பா....?
யோசித்தாலும் பதில் தெரியவில்லை..
நீயும் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா?..
அறிமுகப்படுத்திய உறவு
எதுவாக இருப்பினும்
இன்று வரை தொடர வைப்பது
என்ன உறவு?

உறவை பற்றிய யோசனை ஒரு புறம் இருக்க..
உன்னை பற்றியும் சில வரிகள்..

உன்னிடம் பிடித்தது
உன்
நேர்மை..
உழைப்பு..
புத்திசாலித்தனம்..
தேடலில் இருக்கின்ற ஆர்வம்..
உன் அன்றாட நிகழ் கால இறந்த கால
நிகழ்வுகளை என்னிடம் சொல்வது..
...தினமும் நலம் விசாரிப்பதில் ஆரம்பித்து..
அப்படியே அலசல் தொடர்கிறது..
அவ்வப்போது "நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்களே"
என்று குறும்பாக நான் நக்கல் அடிக்க ..
பெருமையில் நீ ஆழ்ந்து போக..
ஜோக் அடிச்சேன் என்று சொல்லி சிரிக்க..
ஏய் அடி வாங்குவ என்கிறாய் நீ..
ஏனோ சந்தோசத்தில் மிதக்கிறது மனம் ..
ஆனால் இது காதல் இல்லை!

இப்படியே நாட்கள் கடக்க
ஒரு நாள்..
என்னை அசர வைத்த சம்பவம் அது..
முத்தமிட்ட இதழ்கள்..
அள்ளி அனைத்த கைகள்...
என்னிடம் சிலுமிஷம் செய்து
செல்லமாக குத்தும்
உன் மீசை...
இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது.
என்னையும் அறியாமல்
உன்பால் என்னை ஈர்த்தது
உண்மை.
ஆனால் இது காதல் இல்லை!

மனம் சொல்கிறது
இது
கலாசார முரண்பாடு...
எனினும்
மரபுகளை முறித்துக்கொண்டு...
யதார்த்தமாக இருக்க சொல்கிறது
எனது சுயம்!

இவை அத்தனையும் கடந்து..
இருவரும் வெவ்வேறு திசையில்
பயணிக்கிறோம்..
வாழ்க்கை இயல்பு !

இது வரை நீ படித்தது போதும்.

இப்பொழுது சொல்..

எனக்கு நீ என்ன உறவு?

7 comments:

 1. ரொம்ப சிக்கலான ஒரு விஷயத்த எளிமையான வார்த்தைகள் கொண்டு சுருக்கமா சொல்லி இருக்கீங்க. இதுவரை, நிறைய பேர் இந்த மாதிரியான சிக்கலான சமாச்சாரங்களை கவிதை வடிவில் விவரித்து இருந்தாலும் உங்களோட இந்த கவிதையிலும் தனித்தன்மை இருக்கத் தான் செய்யுது... அது மட்டுமில்லாமல், உங்கள் கவிதையோடு ஒப்பிடும் போது இந்த மாதிரியான கவிதைகள் அளவிலும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். நீங்கள் சுருக்கமாக எழுதிய விதம் கொண்டு உங்கள் கவிதையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது...

  எப்படி இருந்தாலும், உங்கள் கவிதையின் கடைசி வரியை படித்த முடித்த கணம் எனக்கு நியாபாகத்திற்கு வந்தவை எங்கேயோ படித்த கீழ்க்கண்ட வரிகள்...

  சில உறவுகளை நியாயப்படுத்த முடியாது, நியாயப்படுத்தவும் கூடாது...

  ReplyDelete
 2. Thx Sundar..

  Yes u r right...some relationships cannot be judged.

  ReplyDelete
 3. "சில உறவுகளை நியாயப்படுத்த முடியாது,
  நியாயப்படுத்தவும் கூடாது..."

  சுந்தர், எங்கேயோ படித்த வரி ஆனாலும் ...chancea இல்ல.. சூப்பர்..

  ஆணி அடிச்சமாரியான கருது..

  ReplyDelete
 4. ஒரே குழப்பமா இருக்கு!!!!

  உறவு இங்கு இலைமறை காயாக சொல்லப்பட்ட விதம்

  ReplyDelete
 5. படைத்து விட்ட உறவுகளை
  காட்டிலும் உள்ளமும்
  உணர்வுகளும் புரிந்து கொண்ட
  உறவே மேலானது!!!

  ReplyDelete
 6. கட்டமைத்துக்கொண்ட உறவுச்சிக்கல்களுக்குள் புனிதம் என்கின்ற ஒன்றெல்லாம் இருக்கிறதா என்ன? சலித்துவிட்ட அல்லது நிறைவு பெறாத காதலில் இருந்து விலகிச்செல்வது நேர்மையான செயலாகத்தான் இருக்கமுடியும். காரணம் - சமூக ஒடுக்குமுறைகளே அன்றி, வேறென்ன? கள்ளக்காதல் (?!) போன்ற சொல்லாடல்களைத் தவிர்த்து சமூகம் ஆரோக்யமான விவாதங்களுக்கும், தீர்வுகளுக்கும் திறந்த மனநிலையோடு இவ்விடயத்தை அணுக வேண்டியது கட்டாயமாகிறது.

  ReplyDelete