Monday, August 30, 2010

பதிவுலகின் Green Baby :அட நான்தாங்க...

இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த சகோதரர்  சேட்டைகாரனுக்கு நன்றி :-)

வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-).

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?


அஷீதா.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அஷீதா'தான் உண்மையான பெயர்(என்னா டீட்டைலா கேட்கறாங்கப்பா).என் பெயரே அழகா  இருக்கும் போது நான் ஏன்  மத்த பேருல எழுதனும்.

என்னோட வலைப்பதிவு  "நான் பேச நினைப்பதெல்லாம் " இது  உருவான   வரலாறு  சொல்றேன் கேளுங்க.எதுக்குமே  வரலாறு  ரொம்ப  முக்கியம்  பாருங்க . வீட்டுல ஆரம்பிச்சு காலேஜு ஆபிஸுன்னு ஒரு இடம் விடாம மொக்கை போட்டு போட்டு ஒரு  ஸ்டேஜுல 'பொல்லாதவன்'  படத்துல  வர  காமெடி  மாதிரி  ஆயிடுச்சு  நம்ம  நிலைமை. டேய்  குமாரு  நீ  கேளேன் , டேய்  நீ  கேளேன்  , மச்சி  நீ கேளேன் , மாப்பு  நீ  கேளேன்  இந்த  மாதிரி  நான்  மொக்கை  போட  மத்தவங்கள  கெஞ்ச  வேண்டியதா போய்டுச்சு. இதுக்கும் மேல பொறுக்க முடியாதுன்னு முடிவு பண்ணி தான்,  இனி  மக்களை  நம்பி  ப்ரோயோஜனம்  இல்லை வலையுலகத்துல இறங்கிட வேண்டியதுதான்.அங்க தான் நாம என்ன எல்லாம் பேச நினைக்கிறேமோ எல்லாமே சுதந்திரமா பேசலாம்ன்னு நினைச்சு "நான் பேச நினைப்பதெல்லாம்"ன்னு தொடங்கியாச்சு (பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல). ஏதாச்சும் இலவசமா கிடைச்சா Q' ல  நிக்கற  கூடத்துல  நானும்  ஒருத்தி . அபப்டி  இருக்கும்  போது  அன்பா  ஆதரவா கூகுளாண்டவர் எனக்கிட்ட வந்து  உன்னை மாதிரி ஒரு அறிவாளியைதான் இந்த  பதிவுலம் தேடுதுன்னு சொன்னாரு (மனசாட்சி: இப்படியா  சீனு போடுவ. உனக்கு  மொக்கை  தான்  போட  வரும்  அதுவும்  உருப்படியா  போட வராது.அதுக்கே  இவளோ  பில்டப்பா). அபப்டியே இலவசமா வலைப்பதிவு  ஒன்ணு  குடுத்தாரு அதான் ஆரம்பிச்சுட்டேன்.  காசு கட்டனும்னு ரூல் இருந்துச்சுன்னா இந்தப்பக்கமே வந்திருக்க மாட்டேன்.

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
இந்த பதிவுகள் அப்படின்னு ஒன்னு இருக்குறதே குப்பைதொட்டி - ஆதவன்  அவர்களின் பதிவை படிச்ச பிறகு தான் தெரிஞ்சுகிட்டேன். தமிழிஷ் இணையத்தில் அவரோட நகைச்சுவை பதிவுகள் படிச்சிட்டு அவரோட ப்ளாக் பின்தொடர ஆரம்பித்தேன். அவர்  பதிவுகளில் வரும் பின்னூட்டத்தின் (கும்மிகள் ) மூலம் நிறைய பதிவுகளை  படிக்க ஆரம்பித்தேன்,படிக்க படிக்க எனக்கும் ஆசை வந்துவிட்டது எழுத. எனக்கு எப்போ அந்த ஆசை வந்துதோ அப்போவே பதிவுலகத்துக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ஒண்ணுமே செய்யல..எனக்கு விளம்பரம் பிடிக்காது.. இப்படி எல்லாம் சொல்லி உலக நடிப்பு நடிக்க ஆசை இல்லை. பிரபலம் ஆக என்ன எல்லாம் செய்யணுமோ எல்லாத்தையும் செய்தேன். முகபுத்தகம், ஆர்குட், ட்விட்டர், தமிழ்மனம், இப்படி சில இடங்களில் விளம்பரம் செய்தேன்.இப்படி  நான் செய்த விளம்பரத்தால சில பேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனாங்க. இதை தவிர பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ  மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு. இது எதுவுமே கை குடுக்காத சமயத்துல தான்,  எனக்கு கிடச்ச ஒரே ஆயுதம் என் ஆபிஸ் நண்பர்கள்.ஒவ்வொரு பதிவு எழுதி முடிச்சதும் விடாம அவங்களை மிரட்டி மிரட்டி என்னோட பதிவுகள் படிக்க வச்சேன். நான் ப்ராஜக்ட் மேனேஜரா   இருக்கறதனால என்னோட டீம் மெம்பர்ஸ்க்கு நான் தான் லீவ் சாங்க்ஷன் பண்ணனும். அதனால என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டா  தான் லீவு சாங்க்ஷன் பண்ணுவேன்னு ப்ளாக்மெயில் செய்வேன்(இதெல்லாம் ஒரு பொழப்பு). இப்படி தாங்க நான் பிரபல பதிவர் ஆனேன் :)

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆமா ன்னு சொன்னாலும் வம்பு , இல்லைன்னு சொன்னாலும் வம்பு. அதனால இப்போதைக்கு :) ஒரு சிரிப்பானை மட்டும் பதிலா போடறேன்.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நான் பதிவுகள் மூலமா சம்பாதித்த காசு வச்சு தான் போயஸ் கார்டன்ல ரஜினி வீட்டு பக்கத்துல ஒரு பெரிய பங்களா வாங்கி  இருக்கேன். எங்க வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தா ..அப்படியே ரஜினி வீட்டுல இருக்கற மினி தியேட்டர் கூட தெரியுது..இந்திரன் படத்தையே ஜன்னல் வழியா பார்த்துட்டேன்னா
பாருங்க. அடுத்து benz கார் வாங்குறதுக்கு ரெடி ஆயிட்டு இருக்கேன். 

 
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இந்த கேள்வியை  பார்த்ததும் விழுந்து விழுந்து சிரிச்சதுல முதுகு தண்டு உடைஞ்சு இப்போ ராயபுரம் தர்ம ஹாஸ்பத்திரியில கிடக்குறேன். என்னை பார்க்க வரணும்னா ஆளுக்கு ரெண்டு  ஹோர்லிக்ஸ் பாட்டிலோடதான் வரணும். ஏனா நான் ஹோர்லிக்ஸ் அப்படியே சாப்பிடுவேன்.

அட போங்க பாஸ் இருக்கற  ஒண்ணு  வச்சுக்கிட்டு  அதுக்கு  மேட்டர்  தேத்தவே  ஐயா  புடி  அம்மா  புடின்னு  ஆயிடுது.  கேட்க்குராயிங்க பாரு கேள்விய..


8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
நாகரீகம் இல்லாமல் எழுதறவங்க மேல கண்டிப்பா கோவம் வந்ததுண்டு , அவங்களவிட அந்த பதிவுக்கு பின்னூட்டம் போடறேன்னு சொல்லிட்டு ஒரு கும்பல் வந்து கும்மி அடிப்பாங்களே அவங்க மேல தான் அதிகமா கோவம் வரும்.. அபப்டியே அவங்க மூக்கு மேல குத்தனும்ன்னு தோணும். அப்புறம் அற்புதமாய் எழுதும் பலரிடம் மதிப்பும், மரியாதையும் வந்திருக்கு.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
இது  வரை  யாருமே  நேரடியா தொடர்பு கொண்டு பாராட்டியது  இல்லை .பின்னூட்டத்தில  பாராட்டியதோடு  சரி .
ஆரம்பகாலத்துல ஆதவன் , சென்ஷி , வினோத்  கௌதம் , கோபி  இவங்க  எல்லோரும்  கமெண்ட்ஸ் போடுவாங்க. அன்பு  சகோதரர்  சேட்டைக்காரன் , வெட்டி  பேச்சு  சித்ரா, ஆதவன் இவங்க மூணு பேரும் தவறாம என்னுடைய ஒவ்வொரு  பதிவுக்கும் பின்னூட்டம் போட்டு இன்று  வரை  என்னை மேலும் மேலும்  எழுதுவதற்கு  உற்சாகப்படுதிட்டு இருக்காங்க. இவங்களுக்கு என் நன்றிகள்.  

நான்  எழுதுறது பாதிப் பேருக்குப் புரியாது, பாதி எனக்கே புரியாது அப்படி  இருந்தும்  என்னை மதிச்சு மூனு தடவ  விருது  குடுத்தாரு நண்பர் ஜெய்லானி. அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. (இப்போ  எல்லாம்  நமக்கு  எந்த விருதும் வரமாட்டேங்குதே என்ன மேட்டர்.அதான் நீங்க சொன்னா மாதிரியே உங்களை பிரபலம் ஆக்கிட்டேன் இல்ல, அடுத்த  விருது  ஏற்பாடு  பண்ணுங்கப்பு ). வால்பையன் , அஹ்மத்  இர்ஷாத் , ஜோ, முகிலன் , அச்சு , ஜீவ்ஸ்  இவங்களும் தொடர்ந்து  என்னை  உற்சாகப்படுதிக்கிட்டு  இருக்காங்க. இவங்களுக்கும் என்  நன்றிகள்.

இவங்க மட்டுமல்லாம, அவ்வபோது வந்து என்னுடைய பதிவுக்கு தகுந்த பின்னூட்டங்கள் போட்டு  என்னை ஊக்கப்படுத்தி வரும் அனைத்து அலுவலக நண்பர்களுக்கும், பதிவுலக  நண்பர்களுக்கும் , தமிழ்மணத்துக்கும், மற்ற அனைவருக்கும் என் நன்றிகள்.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
சுருக்கமா  சொல்லனும்னா  நான்  ஒரு கலவை.. கொஞ்சம்  சாம்பார் , கொஞ்சம்  பாஸ்டா (pasta), கொஞ்சம்  ஜீன்ஸ் , கொஞ்சம்  மடிசார் , கொஞ்சம்  சுறுசுறுப்பு, கொஞ்சம்  சோம்பேறி , கொஞ்சம்  அறிவாளி  (அட  நம்புங்க) , கொஞ்சம்  கோமாளி , கொஞ்சம்  அழகு  (ஆசைக்கு  சொல்லிக்க  வேண்டியதுதான் ) கொஞ்சம்  சிரிப்பு , கொஞ்சம்  கோபம், கொஞ்சம் பரதம், கொஞ்சம் டிஸ்கோ கடைசியா கொஞ்சம் மொக்கை (நிஜமாவே கொஞ்சமாதான் மொக்கை போடுவேன்). மொத்ததுல நான் ஒரு Green Baby (அப்பாடா டைட்டில் வந்துடுச்சு).

36 comments:

  1. கடைசியாக----விருப்பம் இருந்தால்//

    யாருப்பா இத வெச்சது ஆளாளுக்கு மொக்க தாங்கல....

    ReplyDelete
  2. நாகரீகம் இல்லாமல் எழுதறவங்க மேல கண்டிப்பா கோவம் வந்ததுண்டு//

    Same Blood..

    ReplyDelete
  3. உங்கள் மொக்கை படிக்க படிக்க ரசனையுடன் இருக்கிறது....

    ReplyDelete
  4. ஹி... ஹி... நைஸ்..

    ReplyDelete
  5. ஒவ்வொரு பதிவு எழுதி முடிச்சதும் விடாம அவங்களை மிரட்டி மிரட்டி என்னோட பதிவுகள் படிக்க வச்சேன். நான் ப்ராஜக்ட் மேனேஜரா இருக்கறதனால என்னோட டீம் மெம்பர்ஸ்க்கு நான் தான் லீவ் சாங்க்ஷன் பண்ணனும். அதனால என்னோட பதிவுக்கு பின்னூட்டம் போட்டா தான் லீவு சாங்க்ஷன் பண்ணுவேன்னு ப்ளாக்மெயில் செய்வேன்(இதெல்லாம் ஒரு பொழப்பு). இப்படி தாங்க நான் பிரபல பதிவர் ஆனேன் :)//

    மேல இருக்கற வரிகள் உண்மையா பொய்யா எனக்கு தெரியாது...ஆனால் அந்த வரிகள் மிகவும் ரசித்தேன்....

    ReplyDelete
  6. ///இந்திரன் படத்தையே ஜன்னல் வழியா பார்த்துட்டேன்னா பாருங்க.///

    ஹா..ஹா.. ரசித்தேன்...!


    ஆனா அது இந்திரன் இல்ல எந்திரன்..!;;))

    ReplyDelete
  7. \\ இந்த தொடர்பதிவிற்கு என்னை அழைத்த சகோதரர் சேட்டைகாரனுக்கு நன்றி :-) \\

    அந்த நல்ல காரியத்தைச் செஞ்சது இவர்தானா

    \\வழக்கம் போல இதுவும் மொக்கையாத்தான் இருக்கும். எதையும் தாங்கும் இதயம் உள்ளவர்கள் மட்டுமே தொடர்ந்து படிக்கவும் :-). \\

    வழக்கம் போல மொக்கயாதான் பின்னூட்டமும் இருக்கும். ஒன்னுக்கு ரெண்டு இதயம் அவசியம் வேணும் இதைப் படிக்க. stand by ல இன்னொன்னை ரெடியா வைத்துக்கொள்ளுங்கள்.

    \\டேய் குமாரு நீ கேளேன் , டேய் நீ கேளேன் , மச்சி நீ கேளேன் , மாப்பு நீ கேளேன் இந்த மாதிரி நான் மொக்கை போட மத்தவங்கள கெஞ்ச வேண்டியதா போய்டுச்சு. \\

    நீ-கேளேன் அப்படின்னே ஒரு வலைப்பூ இருக்கு தெரியுமா? intellectual property rights act படி நீங்க பண்ணது எவ்ளோ பெரிய தப்பு தெரியுமா?

    \\"நான் பேச நினைப்பதெல்லாம்"ன்னு தொடங்கியாச்சு (பேர கேட்டாலே சும்மா அதிருதில்ல). \\

    சொல்றது ஒன்னு செய்றது ஒன்னால்ல இருக்கு. பேசுறதுக்குப் பதிலா எழுதுறீங்க

    \\எனக்கு எப்போ அந்த ஆசை வந்துதோ அப்போவே பதிவுலகத்துக்கு ஏழரை ஆரம்பித்துவிட்டது. \\

    but ஒங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

    \\எனக்கு விளம்பரம் பிடிக்காது.. இப்படி எல்லாம் சொல்லி உலக நடிப்பு நடிக்க ஆசை இல்லை. \\

    பார்ரா மறுபடியும் ஒங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு

    குறிப்பு: இன்னும் பதிவை முழுதும் படிச்சு முடிக்கலை. அப்புறமா இன்னும் இரண்டு மூன்று பின்னூட்டம் போடா வேண்டி வரும்னு தோணுது. அது குறைந்த பட்சம்தான்.

    ReplyDelete
  8. //இதை தவிர பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு.//

    திருப்பதி ஏழுமலையானுக்கே மூணு மொட்டையா? அவ்வ்வ்வ்வ்வ்!

    என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி, எனது அன்புக்கட்டளையை ஏற்று, அண்ணனுக்கேத்த தங்கையாய் அருமையாய், அற்புதமாய், அமர்க்களமாய், அமோகமாய், ஆனந்தமாய், அலப்பறை பண்ணியதற்கு மிக்க நன்றி! :-)

    ReplyDelete
  9. கலக்கீடீங்க ஆஷித ........ ...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது ............

    பல உண்மைய சொனீங்க ஆஷித ஒன்னு சொல்ல மறந்துடீங்க ........அழகுல நீங்க ஜோ ......ஜோதிகா மாதுரி (நீங்க சொல்ல சொன்னத அப்படிஏய் சொல்லிட்டேன் )........

    Really Super Ashitha ...Sorry Green Baby...............

    Yours Friendly,
    Sujatha

    ReplyDelete
  10. சுருக்கமா சொல்லனும்னா நான் ஒரு கலவை.. கொஞ்சம் சாம்பார் , கொஞ்சம் பாஸ்டா (pasta), கொஞ்சம் ஜீன்ஸ் , கொஞ்சம் மடிசார் , கொஞ்சம் சுறுசுறுப்பு, கொஞ்சம் சோம்பேறி , கொஞ்சம் அறிவாளி (அட நம்புங்க) , கொஞ்சம் கோமாளி , கொஞ்சம் அழகு (ஆசைக்கு சொல்லிக்க வேண்டியதுதான் ) கொஞ்சம் சிரிப்பு , கொஞ்சம் கோபம், கொஞ்சம் பரதம், கொஞ்சம் டிஸ்கோ கடைசியா கொஞ்சம் மொக்கை (நிஜமாவே கொஞ்சமாதான் மொக்கை போடுவேன்). மொத்ததுல நான் ஒரு Green Baby (அப்பாடா டைட்டில் வந்துடுச்சு).


    ..... எல்லாம் ஒன்றாக கலந்தால், Green Baby..... OK!!!!

    ReplyDelete
  11. :)))) கலக்கிட்டேள் போங்கோ :)

    ReplyDelete
  12. :)))) கலக்கிட்டேள் போங்கோ :)

    ReplyDelete
  13. எங்கே குடுத்த விருத பரன்ல வச்சிட்டீங்களா... எடுத்து மாட்டுங்க வாசல்ல .....!!!

    ReplyDelete
  14. இதை வித மொக்கையா , அழகா , ஹி..ஹி.. வித்தியாசமா உங்களை தவிர யாராலும் சொல்ல முடியாது ..

    :-))

    ReplyDelete
  15. பதிவுலகின் Green Baby

    உங்க பையனுக்கு பொண்ணு பார்க்கும் இந்த நேரத்தில் உங்களை Baby சொல்லுறிங்களே இது நல்ல இருக்கா டேமேஜர்.

    இருந்தாலும் உங்க மொக்கை படிக்க படிக்க ரசனையுடன் இருக்கிறது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. //ஆதவன் , சென்ஷி , வினோத் கௌதம் , கோபி//

    நாலு பேருமே அமீரக பதிவுலக போர்ப்படை தளபதிகள்.. :)

    ReplyDelete
  17. அது என்னங்க Green Baby ..கொஞ்சம் HULK மாதிரில இருக்கும் அப்படி இருந்தா..:)

    ReplyDelete
  18. //பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு.//

    திருப்பதிக்கே மொட்டை போட்டிங்களா

    ReplyDelete
  19. //கொஞ்சம் பரதம், கொஞ்சம் டிஸ்கோ //


    சென்னையில் அடிக்கடி நிலநடுக்கும் வரக்காரணம் கண்டுபிடிச்சிட்டேன்!

    ReplyDelete
  20. /* நான் பதிவுகள் மூலமா சம்பாதித்த காசு வச்சு தான் போயஸ் கார்டன்ல ரஜினி வீட்டு பக்கத்துல ஒரு பெரிய பங்களா வாங்கி இருக்கேன். எங்க வீட்டு ஜன்னலை திறந்து பார்த்தா ..அப்படியே ரஜினி வீட்டுல இருக்கற மினி தியேட்டர் கூட தெரியுது..இந்திரன் படத்தையே ஜன்னல் வழியா பார்த்துட்டேன்னா பாருங்க. அடுத்து benz கார் வாங்குறதுக்கு ரெடி ஆயிட்டு இருக்கேன்.
    */

    ஹா ஹா ஹா. ரசித்தேன்...
    கலக்கல் பதிவு...

    ReplyDelete
  21. சில பேரு உள்ளே ஏதாச்சும் இருக்கும்னு வந்து ஏமாந்துட்டுப்போனாங்க.///

    நானும் வந்து ஏமார்ந்து போயிட்டேன்

    ReplyDelete
  22. ராயபுரம் தர்ம ஹாஸ்பத்திரியில கிடக்குறேன். என்னை பார்க்க வரணும்னா ஆளுக்கு ரெண்டு ஹோர்லிக்ஸ் பாட்டிலோடதான் வரணும்///

    வார்டு நம்பர் என்னனு சொல்லுங்க நான் அந்த ஏரியா தான் வந்து பார்கிறேன்

    ReplyDelete
  23. இது வரை யாருமே நேரடியா தொடர்பு கொண்டு பாராட்டியது இல்லை////

    யாருக்குமே போன் நம்பர் தெரியாது எப்படி தொடர்பு கொண்டு பாராட்டுவார்கள் அவ்வ்வ்வ்

    ReplyDelete
  24. கொஞ்சம் சோம்பேறி///

    இதை நம்புறோம்.....

    ReplyDelete
  25. அப்ப்ப்ப்ப்ப்பபாஆஆஆஅ சூப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
  26. //இதை தவிர பதிவு எழுதின கையோட திருப்பதி போய் ஏழுமலையானுக்கு மூணு தடவ மொட்டை போட்டுட்டு வந்த கதை வேற இருக்கு.///

    ஏழுமலையானுக்கேவா???

    ReplyDelete
  27. http://blogintamil.blogspot.com/2010/11/blog-post_17.html..

    ReplyDelete
  28. HMM கிறீனு பேபிய ஆள காணோம்.. ???

    ReplyDelete
  29. ஏனுங்...இப்போலாம் பேசறது இல்லியா ...வாங்க ..உங்கள எதிர்பார்த்து இந்த நாடே (ஹி..ஹி..ஹி..) காத்துட்டு இருக்கு ...உங்க எழுத்து நடை அருமை ...முதல் முதலாய் வருகிறேன் ...

    ReplyDelete
  30. ஹலோ பச்சக்குழந்தையே ! ஏதோ தற்செயலா உள்ள வந்தேன், இன்னும் முழுசா படிக்கல,பாராட்டுக்கள்,எனக்கும் ஒரு தனி blog ஆரம்பிக்கனும்னு ரொம்ப நாளா ஆசை,ஆனா உங்கள மாதிரி பாதிலேயே விசயம் இல்லாம எழுதாம விட்டுறுவனோன்னு பயமாயிருக்கு,ஏதயாவது எழுதுங்க,நாங்களும் பச்சக்குழந்த தான் ,வருவோம்

    சாமுராய்

    ReplyDelete
  31. அருமையான மொக்கை சாரி பதிவு.முதல்முதல் உங்கள் வலைப்பக்கம் வருகிறேன் ரசிக்க தக்க பதிவு.

    ReplyDelete
  32. வணக்கம் சகோதரி ஒவ்வொரு கேள்விக்கும் மிக
    நகைச்சுவை உணர்வோடு தங்கள் கொடுத்த பதில்கள்
    மனத்தைக் கவர்ந்தது!....வாழ்த்துக்கள் தங்கள் முயற்சிகள்
    மென்மேலும் சிறந்து விளங்க .

    ReplyDelete
  33. ப்ளாக் எழுதக்கூடாதுன்னு உங்க ஆத்துகாரர் சொல்லிட்டாரா?

    ReplyDelete