Wednesday, May 19, 2010

படிச்சு பார்த்தேன் ஏறவில்ல...

என்ன பதிவு எழுதுவது என்று யோசித்து கொண்டு இருக்கும் சமையத்தில் தான் நண்பர் ஆதவன் "தேர்வு" என்ற தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ’ஆத்துல போற தண்ணிய அய்யா குடி அம்மா குடி’  என்ற மாதிரி பத்தோட பதினொன்னா பாவம் போனா போகட்டும்ன்னு என்னை கூப்பிட்டு இருந்தாரு. நமக்கு சொல்லவா வேணும் பெருமை தாங்கல....தொடர் பதிவு அழைப்புக்கு நன்றி பாஸ்.

பள்ளி  நாட்கள், கல்லூரி நாட்கள் எத்தனை இனிமையானதா இருந்தாலும். என்னை ஏன்டா படைச்ச ஆண்டவான்னு பொலம்ப வச்சது பரீட்சை நாட்கள். ம்ம்ம்.. மன்னிக்கணும் இந்த இடத்தில ஒரு சின்ன கொசுவத்தி.(flashback).

எங்க ஊரிலிருந்து இருபது  கிலோமீட்டர் தள்ளி தான் நாங்க படிச்ச பள்ளிக்கூடம் இருந்தது.
எங்க ஊரிலிருந்து நாங்க மூணு பேரு (நான், பிரேமா, உமா) ஒரே ஸ்கூலில் ஒரே வகுப்பில் படித்தோம். LKG முதல் 9 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூட பேருந்தில் சென்று கொண்டு இருந்தோம்.10 ஆம் வகுப்பில் இருந்து  நாங்க மூவரும்  டவுனில் இருக்கும் எனது சித்தி வீட்டில் தங்கி படித்தோம். பரீட்சை நேரங்களில் நாங்க செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது, கேலியும் கிண்டலுமா இருக்கும். பிரேமாவுக்கு பொறுப்புணர்ச்சி ரொம்ப ஜாஸ்தி..எப்போ பார்த்தாலும்  'நம்ம நல்லா படிக்கணும் நல்ல வேலைக்கு  போகணும்னு' ஏகப்பட்ட அட்வைஸ் செய்ஞ்சே என்  உசுரு வாங்குவா. ரொம்ப ஸ்ட்ரிக்ட், அவ சொன்னத படிக்கலன்னா  திட்டமாட்டா  அடிக்க மாட்டா...ஆனா மினிமம் ஒரு அரை மணி நேரம் லெச்சர் குடுப்பா.

பரீட்சை நேரங்களில் ராத்திரி 12 மணி வரை படிக்கணும்ன்னு ஆர்டர் போட்டுடுவா. 'History' புத்தகத்த கையில  எடுத்துகிட்டு ஆளுக்கு ஒரு பக்கம் செவுத்துல சாஞ்சிகிட்டு  கால நீட்டிகிட்டு உக்காருவோம். மூணு பேரு கால்களும் கிட்ட கிட்ட  வச்சிருப்போம் இதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு படிக்க படிக்க அது என்னனு உங்களுக்கே தெரியும். படிக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலையே என் கண்ணு சொக்கி போய்டும். டப்புன்னு கால போட்டு தட்டி எழுப்புவா உமா...திடீர்னு முழிப்பு வரும் , நானும்  சுதாரிச்சிக்கிட்டு திரும்பவும் படிக்க ஆரம்பிப்பேன். அடுத்த 10 நிமிஷல்துல எனக்கே தெரியாம தூங்கிடுவேன். உக்காந்துட்டே தூங்கும் போது  மடி மேல இருக்கற புத்தகம் எனக்கே தெரியாம கீழே விழுந்துடும், வாயில் இருந்து ஜொள்ளு கூட வரும்.. அந்தளவுக்கு ஆழ்ந்த சுகமான தூக்கம். அப்போ இந்த சண்டாளி உமா பொண்ணு  ஏதாச்சும் பேப்பரை எடுத்து சுருளாக சிகரட்டு மாதிரி செய்ஞ்சி வாயில வச்சுடுவா..இல்லனா வத்திகுச்சி எடுத்து மூக்குல போடுவா. நானும் சடார்ன்னு எழுந்துடுவேன்...என்னை பார்த்து கேலி பண்ணி சிரிப்பாங்க ரெண்டு பேரும் . கோவம் பொத்துக்கிட்டு வரும். என்ன செய்ய விதி..இந்த சிச்சுவேசன்க்கு ஒரு பாட்டு..

ஊருசனம் தூங்கிருச்சு,
ஊத காத்தும் அடிச்சிரிச்சு,
இந்த ரெண்டு பிசாசுங்க
என்னை தூங்க விடலியே,
படிப்பும் மண்டையில் ஏரலியே...
சில சமயத்துல படிக்கிற ஆர்வத்துல அவங்க என்னை கவனிக்க மறந்திருப்பாங்க. நானும் நல்லா தூங்கி வழிவேன், கனவுல டக்குன்னு பிரேமாவோட முகம்  வந்து போகும், சடார்ன்னு முழிப்பு வரும். எப்போ எல்லாம் திடுதிப்புன்னு எழுந்திருக்கிறேனோ அப்போ எல்லாம் கால லேசா ஆட்டுவேன். நான் தூங்காம படிச்சிட்டு இருக்கேன்னு சிம்பாலிக்கா சொல்றதுக்கு தான்  இந்த சிக்னல். இம்புட்டு கஷ்டப்பட்டு  நடிச்சிட்டு இருக்கிற சமையத்துல, இந்த உமா  ராக்ஷசி  இருக்காளே சும்மா இருக்க மாட்டா 'ஏண்டி உன் காலு பத்து   நிமிஷத்துக்கு ஒரு தடவ ஆடிக்கிட்டே இருக்குன்னு'  பிரேமாவை உசுப்பு ஏத்தி விடுவா. அப்புறம் என்ன.. பிரேமா ஒரு 1 /2  மணி நேரம் லெச்சர் குடுக்க ஆரம்பிச்சுடுவா. இந்த கொடுமைக்கு 'History' பாடத்தையே படிச்சிருக்கலாம் போலயேன்னு தோணும். இந்த ரணகளத்துலையும் இந்த உமா பொண்ணு  ' ஹே மறந்தே போய்டோம்  இந்தியா , அமெரிக்கா  மாப் வேற பிராக்டீஸ் பண்ணனும்' ன்னு சொன்னவுடனே பிரேமா
என் தலைல கொட்டு போட்டு  ' ஏன்டி பாரு அவளை எவளோ இண்டரெஸ்ட்டா படிக்கிறா நீ மட்டும் தான் படிக்க மாட்டேங்குற, படிச்சா தான் நாளைக்கு நாம் டாக்டரோ இஞ்ஜினியரோ ஆக முடியும்'  ன்னு  பேசிட்டே போவா. நான் என்னத்த சொல்றது அது எல்லாம் அனுபவிச்சவங்களுக்கு தான் தெரியும் எவளோ கொடுமைன்னு. நட்பு என்னோட வாழ்க்கைல எப்படி எல்லாம் விளையாடி இருக்கு பாருங்க.
 
காலைல எக்ஸாம் ஹால் போகறதுக்கு முன்னாடியே காப்பி அடிக்கிற டிப்ஸ் & சிக்னல் எப்படி குடுக்கனும்னு எல்லாம் பிளான் பண்ணிடுவோம். என்ன பிளான் பண்ணி என்ன பிரயோசனம் என் பெத்தவங்க செய்த தப்புனால எங்களோட பிளான் சில நேரங்களில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். அது என்ன தப்புன்னு கேக்குறீங்களா..அந்த கொடுமை என்னன்னா அது என்னோட பேரு தாங்க. என்னோட பேரு "A" ல ஸ்டார்ட் ஆகரதுனால  நான் எப்போவுமே முதல் பெஞ்ச் தான். சோ காப்பி அடிக்கற சான்ஸ் ரொம்ப கம்மி.  'சரியான விடையை தேர்ந்தெடுக' மாதிரி கேள்விகளுக்கு மட்டும் சைகையாலேயே கேட்டுப்போம்.
பிட் எல்லாம் எடுத்திட்டு போனது கிடையாது...கணக்கு பாடத்துல வர பார்முலா(formula) எல்லாம் உள்ளங்கைல எழுதிடுவேன். அப்புறம் குட்டி குட்டி theorems எல்லாம் என்னோட எக்ஸாம் pad 'ல  பென்சில் வச்சு எழுதிட்டு போவேன். காப்பி அடிச்சு முடிச்சதும் ரப்பர்ல அழிச்சிடுவேன். எனக்கு பக்கத்துல +1, +2 படிக்கற பசங்க உட்கார்ந்து இருப்பாங்க. அவங்களுக்கு நடுவுல நான் உக்காந்து இருப்பேன். என்னோட நல்ல நேரமோ என்னமோ இது வரைக்கும் என் பக்கத்துல உட்க்கார்ந்த பசங்க எல்லாம் மக்கு பசங்க தான்.. பத்து நிமிசத்துல பரீட்சை முடிச்சிட்டு  உட்க்கார்ந்து இருப்பாங்க. என் பின்னாடி பிந்து'ன்னு என்னோட கிளாஸ்மெட் தான் உட்க்கார்ந்து  இருப்பா ..நான் உஸ் உஸ் ன்னு கூப்பிட்டு அவளோட பேப்பர்   கேட்பேன். "தருவீயா? தரமாட்டீயா? தரலைன்னா உன்பேச்சு கா!"
அவளோ பயந்து தரமாட்டேன்னு சொல்லிடுவா.

என்னடா பண்றதுன்னு நான் முழிக்கற முழிய பாத்துட்டு பக்கத்துல இருக்கற பசங்க பின்னாடி திரும்பி அவளோட பேப்பர் புடிங்கி குடுப்பாங்க. நான் காப்பி அடிச்சு முடிச்சதும் அந்த பேப்பர் எடுத்து அந்த பொண்ணுகிட்ட குடுத்திடுவாங்க. அந்த பொண்ணோட பேப்பர் அவளுக்கு போய் சேர்றதுக்குள்ள என் வாய் வழியா ஹார்ட் வெளிலே வந்துடும் போல இருக்கும். கடவுள் இருக்காருன்னு நம்பிக்கை வந்ததே இந்த பசங்களை பார்த்து தான். பரீட்சை  முடியற வரைக்கும் எனக்கு விநாயகர் , முருகன் , சிவன், எல்லாமே அந்த ரெண்டு பசங்க தான். இதே மாதிரியே காப்பியும்  கூத்துமா திக்கு தெணறி ஒரு வழியா 10ஆம்  வகுப்புல first class 'ல பாஸ் பண்ணியாச்சு.

பதினொன்றாம் வகுப்பில் (Elective groups) இருந்தது. முதல் இரண்டு க்ரூப்ல (கணிதம், வரலாறு, உயிரியல், இயற்பியல்) போன்ற பாடங்கள். மூன்றாம்  குரூப் வணிகம், கணினி  போன்றவை. நன்கு படிப்பவர்கள் முதல் இரண்டு க்ரூப்ளையும் என்னை போன்ற அறைந்த வாலுகள் மூன்றாவது  க்ரூப்ளையும் சேர்ந்தோம். பிரேமா முதல் குரூப் எடுத்ததும் எனக்கு பயங்கர சந்தோசம். இனி நமக்கு பிரேமாவின் லெச்சரிலிருந்து  விடுதலை விடுதலை.  உமாவுக்கு நர்ஸ் ஆகவேண்டும் என்ற ஆசை இருந்ததால் இரண்டாவது குரூப் (உயிரியல்) எடுத்த்தாள். பிரேமாவை பார்த்து ... அல்ஜிப்ரா இஸ் கோப்ரா’  என்றும்  உமாவை பார்த்து .....செத்த பிணத்தை அறுக்கிறவேலை, புண்ணைக் கழுவி மருந்து போடுறது நர்ஸ் படிப்பு சீ..சீ.. என்று  கிண்டல் பண்றதுமாவே போயிட்டு இருந்தது +1 வாழ்க்கை.
பொதுவாக மற்றவர்களை போல தினமும் படிக்கும் பழக்கம் இல்லை, தேர்வு நேரங்களில் மட்டும் புத்தகம் எங்கு இருக்கு என்று தேடி தூசு தட்டிவிட்டு படிப்பேன்.

+2 பரீட்சைக்கு பெரிதாக பயந்தது இல்லை. காப்பி அடிப்பதில் கொஞ்சம் வித்தைகள் கற்றுகொண்டதால் சிரமம் ஏதும் இல்லை (இது எல்லாம் ஒரு பொழப்பா என்று நீங்க திட்டுவது காதில் விழுகிறது). +1 &  +2   சேர்ந்தே கும்மி அடித்ததால் தோழிகளுடன் புரிதல் சற்று அதிகம் இருந்தது. இந்த புரிதல் தான் பரீட்சை நாட்களில் போட்ட பல பிளான் வெற்றி அடைய வச்சுது. என் விதிப்படி எப்போவும் நான் முதல் பெஞ்ச் தான். பல நேரங்களில் என் முன்னாடியே தான் சூப்பர்வைசர் நின்னுகிட்டு இருப்பாரு. பரீட்சை  ஹாலில் சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார்கள் எல்லாம் இஞ்சி தின்ன குரங்கு போல் முகத்தை வைத்து கொண்டு குறுக்கும் நெடுக்குமாக பின்புறம் கைகட்டி தர்பார் மண்டபத்தில் நடப்பது போல் நடக்கும் போது நான் பக்கதுல இருக்கிற பொண்ணு பேப்பர் வாங்கி காப்பியில்  மும்மரமாக மூழ்கி இருப்பேன்.

 
சில சமயம்  சூப்பர்வைஸ் செய்ய வரும் வாத்தியார் ரொம்ப சோம்பேறியா இருப்பாரு  உட்க்கார்ந்த  இடத்துல  இருந்து நகர மாட்டாரு. அதுவும் என் முன்னாடியே என் பேப்பரையே பாத்துட்டு 'என்ன இந்த பொண்ணு எதுவுமே எழுதாம முழிக்குதுன்னு'  யோசிக்கிற போல தோணும். ஏதாச்சும் தெரிஞ்சாதானே எழுதறது. ஏதோ எழுதற மாதிரி நடிக்கறதுக்குள்ள உசுரே போய்டும் ,அதுவும் இல்லாம பக்கத்துல பக்கம் பக்கமா எழுதுறவள பார்த்தா டென்ஷன் வரும் பாருங்க அதையும் அனுபவித்தா தான் தெரியும்.
ஹ்ம்ம் என் கஷ்டம் அவருக்கு எப்படி புரியும். இப்படி பட்ட வாத்தியார் வந்துட்டா.. எங்க இருந்து நாங்க போட்ட காப்பி அடிக்கும் பிளான் வொர்க் அவுட் ஆகறது. இந்த மாதிரி நேரத்துல தான் மூளையை உபயோகிப்போம். லாஸ்ட் பெஞ்ச்ல இருக்கும் பொண்ணு பார்த்து  சிக்னல் குடுப்பேன், அவளும் என்னோட கஷ்டம் புரிஞ்சுகிட்டு , அவ எழுந்து 'சார் கொஸ்டின் பேப்பர்ல ஒரு சந்தேகம் இருக்குன்னு ' சொல்லுவா. வாத்தியாரும் எழுந்து லாஸ்ட் பெஞ்ச்கு போய் சந்தேகம்  தீர்த்து வச்சுட்டு வர்ற அந்த காப்ல பக்கதுல இருக்குற பொண்ணு  பேப்பர் வாங்கிடுவேன். பின்னாடி இருக்கற பொண்ணு காப்பி அடிப்பதற்கு என்னோட பேப்பரை பெஞ்ச் மேல கொஞ்சம் நடுவுல வெப்பேன் அவளும் பாத்து எழுதிடுவா, அப்படி இல்லனா பேப்பர் நைசா கீழ போடுவேன், அவளுக்கு பார்த்து எழுதறதுக்கு வசதியா இருக்கிற மாதிரி, வாத்தியார்  பாத்துட்டு பேப்பர் ஏன் கீழ இருக்குன்னு கேட்பாரு  நான் டக்குன்னு ஒண்ணுமே தெரியாத மாதிரி  "ஐயையோ சாரி சார் தெரியாம கீழ விழுந்துடுச்சு" ன்னு சொல்லி பேப்பர் எடுத்து வச்சுப்பேன். எப்படியோ ஒரு வழியாக +2 தேர்வு நல்ல படியாக காப்பி அடிச்சு பாஸ் ஆயாச்சு. படிக்காமலே நான் 89 % விடிய விடிய படிச்ச பிரேமாவும் உமாவும்  72 % , 69 % தான் வாங்க முடிந்தது. அன்னைக்கு அவங்க என்னை மொறச்சு பார்த்த பார்வை இன்னைக்கும் அப்படியே என் நெஞ்சுல ஈரம் ஆறாம இருக்கு. 


கல்லூரிக்குப் போய்விட்டால், மரியாதை இல்லாமல் பேசும் வாத்தியார் இருக்கமாட்டார், அடி உதை இருக்காது, தோழிகளுடன்
இஷ்டம்போல ஜாலியாகத் திரியலாம் இப்படியான எண்ணங்களுடன்தான் கல்லூரிக்குள் அடி வைத்தேன். கல்லூரியில் சேர்ந்தவுடன் ஒரு குரூப் பார்ம்  ஆச்சு..அன்றிலிருந்து வகுப்பில் உள்ள மத்த பசங்களை ஓட்டுவதும் ,கிண்டல் செய்வதுமாக  போய் கொண்டிருந்தது. படிக்காமலேயே தேர்வு எழுதினாலும் கூட எல்லா பாடங்களிலும் பாஸ் ஆக முடிந்த என்னால், இந்த accounts மட்டும் சுத்தி போட்டாலும் வரல. அப்படியும் accounts எக்ஸாம் அன்னைக்கு formulas எல்லாம் கையில எழுதிட்டு போவேன்..ஆனாலும் அந்த formula எங்க  யூஸ் பணனும்னு தெரியாம நொந்து நூடுல்ஸ் ஆனது ஏன் கேக்குறீங்க..பள்ளியில் காப்பி அடிக்க முடிந்த அளவுக்கு கல்லூரியில் காப்பி அடிக்க சந்தர்பம் கிடைக்காதது எந்த ஜன்மத்தில் செய்த பாவமோன்னு அடிக்கடி பீல் பண்ணி இருக்கேன். மத்த பாடங்களில் ஓரளவுக்கு நல்ல ரிசல்ட் வந்தாலும்  accounts மட்டும்  ரெண்டு வருசமும் அரியர் தான். எனக்கு இதான்  பிரச்சனை. எனக்குன்னு வரும்போது எதுவுமே நடக்குறது இல்ல. அப்படி நான் என்ன பெரிசா கேட்டேன். நீங்கலாம் வாங்குற மாதிரி Distinction ஆ கேக்குறேன் சாதாரண பாஸ் மார்க் தானே அது ஏன் எனக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது. எப்படியோ கடைசியா மூணாவது  அட்டெம்ப்ட்ல பாஸ் பண்ணிட்டேன். 

கடைசி ஆண்டு பரீட்சைல நடந்த கூத்துதான் இது. Economics பேப்பர் எனறால் எங்க செட்ல எல்லோர்க்கும் கஷ்டம். எங்க கிளாஸ்ல சந்தோஷ்'ன்னு ஒரு பையன் சொன்னான்,  2000 ரூ இருந்தால் அவனுக்கு தெரிந்தவர் மூலமாக
கொஸ்டீன் பேப்பர் வாங்கிவிடலாம் என்று. நாங்க எல்லாம் அவங்க அவங்க கையில இருந்த காசு போட்டு வாங்கினோம். இதுல இருக்கற கேள்விகள் மட்டும் படிச்சா போதும்னு சந்தோஷ் சொல்ல, நாங்க எல்லோரும் அது  மட்டும் தான் படித்தோம். மறுநாள் காலைல எக்ஸாம். நாங்க எப்போவுமே இருக்கற டென்ஷன் இல்லாம கூலா போனோம் நமக்கு தான் எல்லாம் தெரியுமென்ற தெனாவட்டோட. கொஸ்டின் பேப்பர் பார்த்தவுடனே ஹார்ட்டே நின்னு போய்டும் போல ஆயிடுச்சு. நாங்க படிச்ச கேள்வி ஒன்னு கூட வரல. பரிட்சைல பெயில் ஆயிடுவுமோ என்ற கவலை விட...அந்த 2000 ரூ போன கவலை தான் பெருசா தெரிஞ்சுது. ஒன்னுமே புரியல உலகத்திலே.. என்னமோ நடக்குது மர்மமா இருக்குது. ஏதோ எழுதிட்டு வெளியில வந்து முதல் வேலையா அந்த பையன் சந்தோஷை போட்டு மொத்து மொத்துன்னு மொத்தினோம்.

ரிசல்ட்ஸ்  வந்தது  நான் ஆல் பாஸ்...என்னோட செட்ல எல்லோரும் economics'ல பெயில். அதுக்கு அப்புறம் என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது.

24 comments:

 1. //பிட் எல்லாம் எடுத்திட்டு போனது கிடையாது...கணக்கு பாடத்துல வர பார்முலா(formula) எல்லாம் உள்ளங்கைல எழுதிடுவேன். //


  இதுக்கு பேரும் பிட்டுதான்!

  பிட்டு பேப்பர்ல எழுதுட்டு போறது மட்டும் பிட்டில்ல!
  பிட்டு பிட்டா எழுதிட்டு போறதும் பிட்டு தான்!

  ReplyDelete
 2. ஏ ஆத்தி! என்னா வில்லத்தனம்.... :-))))

  ReplyDelete
 3. ரிசல்ட்ஸ் வந்தது நான் ஆல் பாஸ்...என்னோட செட்ல எல்லோரும் economics'ல பெயில். அதுக்கு அப்புறம் என்னோட நிலைமை எப்படி இருந்திருக்கும்ன்னு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
  எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது.


  ....... நெம்ப நல்ல friendsu ....... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

  ReplyDelete
 4. எப்ப‌டியோ ப‌ரிட்சையை ந‌ல்ல ப‌டியா எழுதிட்டீங்க‌... பாஸூம் ஆயிட்டீங்க‌... இது டெல்லி வ‌ரைக்கும் பேசுமே!!!!!!!!!

  ReplyDelete
 5. ஆஹா சரியான ரௌடியா இருந்திருக்கீங்க போல ... நடத்துங்க

  ReplyDelete
 6. ஆஹா, நீங்களும் எழுதிட்டீங்களா? இப்போ நானும் எழுதித்தான் தீரணும் போலிருக்கே! உங்க அளவு கலக்கலா எழுதணுமேன்னு கவலையா இருக்கு! :-(

  ReplyDelete
 7. உங்க வெற்றிக்கு பின்னாடி இவ்வளவு பெரிய பிட் (Accounts, History, Economics, Maths....) ஸ்டோரியா!!!!!!!!!!!!!!!!!!.

  பிட் அடிகுறதுகும் ஒரு திறமை வேணும். ...அது உங்க கிட்ட கொஞ்சம் ஓவரா வே இருக்கு...

  உங்க பசங்ககிட்ட இந்த ஸ்டோரிய சொல்லிடாதீங்க ...............

  Yours friendly,
  Sujatha

  ReplyDelete
 8. //கடவுள் இருக்காருன்னு நம்பிக்கை வந்ததே இந்த பசங்களை பார்த்து தான். பரீட்சை முடியற வரைக்கும் எனக்கு விநாயகர் , முருகன் , சிவன், எல்லாமே அந்த ரெண்டு பசங்க தான்//

  ஹா..ஹா...ரசித்து சிரித்த வரிகள்...

  ReplyDelete
 9. பிட்ட பத்தி பட்டுன்னு சொல்லிட்டீங்க... சுவராஸ்யமா இருக்கு...

  ReplyDelete
 10. அஷிதா........

  நீங்க உண்மையிலேயே திறமைசாலி தான்.... எனக்கு ஒரு பிட் எழுத கூட தெரியாது.
  ஒரு முறை பிட் எழுதி கடைசி வரைக்கும் பிட் கொண்டு வந்ததே தெரியாம பரிட்சை எழுதினேன்.

  ரொம்ப பயப்புடுவேன். பத்தாம் கிளாசு படிக்கும் போது நான் நல்லா படிக்கிற பழமான பையன். கணக்கு பாடம் எனக்கு அல்வா சாப்புடுற மாதிரி. என்ன பாத்து எழுதுறதுக்கு ஒரு கூட்டமே இருக்கும், ஆனா நான் கேள்வி தாள் வாங்கிட்டால் என் தலை பரீட்சை முடியிரவரை நிமிரவே செய்யாது. அவ்வளவு ஆர்வ கோளாறு நான்.

  பத்தாம் கிளாசு இறுதி தேர்வில், பரிட்சை ஹால் வாத்தியாரே என்னிடம் வந்து எல்லாருக்கும் உன் பேப்பரை காபி அடிக்க குடுக்கனும்னு சொன்னாரு. அன்னிக்கு தான் பயமே இல்லாமல் பேப்பரை எல்லாருக்கும் குடுத்தேன், ஏதோ கடவுள் புண்ணியத்துல 95 மார்க் எடுத்துட்டேன்.

  காலேஜ் வந்த பிறகு ராத்திரி 12 மணிக்கு மேல யாரு என்ன சொன்னாலும், புக்கை தொடவே மாட்டேன். நல்லா சுகமா தூங்குவேன், ஆனா ஜொள்ளு வுட மாட்டேன். அதே போல பகல் நேரத்தில் ஒரு நிமிஷம் கூட செலவழிக்காமல் படிச்சிகிட்டே இருப்பேன். என்னத்த படிச்சி என்ன பிரயோஜனம்? 67% க்கு மேல வாங்க முடியல!!!!

  ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சிகிட்டேன்.

  "நல்லா படிச்சவன் யாரும் நல்லா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அதே போல நல்லா படிக்காதவங்க யாரும் கஷ்டப்படுவாங்கன்னு சொல்ல முடியாது!!!"

  நல்ல நகைச்சுவையான பதிவு.

  தொடர்ந்து எழுதுங்க, கலக்குங்க!!! :-)

  ReplyDelete
 11. //எப்படியோ ஒரு வழியாக +2 தேர்வு நல்ல படியாக காப்பி அடிச்சு பாஸ் ஆயாச்சு. படிக்காமலே நான் 89 % விடிய விடிய படிச்ச பிரேமாவும் உமாவும் 72 % , 69 % தான்//

  இது உண்மையா?

  //எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது//

  ha ha haa haaa

  ReplyDelete
 12. எவ்ளோ வால்தனம் பண்ணாலும், கடைசியில பாஸ் பண்ணீட்டீங்களே.. அதான் முக்கியம்.. super :)

  அப்புறம் உங்க பிரண்ட்ஸ், வருத்தப் பட்டதோட விட்டாங்களா. இல்ல.. ஸ்பெஷல் கவனிப்பா?
  very nice..

  ReplyDelete
 13. ஹாய் ஆஷித,
  உங்கள் கதை நான் மறந்திருந்த நீரைய நீகைவூகனை புதுப்பித்து வண்ணம் தீட்டியது இந்தக்கதை. இந்த தலைப்பு "படிச்சு பார்த்தேன் ஏறவில்ல" ஹன்னை கவர்ந்தது மட்டும் இல்லாமல் ஹன்னை ஹன் பள்ளி நட்கலுக்க்கே க்ஹோண்டு சென்றது. நான் வாங்கிய ஹடி ஒதை பனிஷ்மென்ட் எல்லாம் ஹன் நீனைவுக்கு வந்தது. ஹப்போயுது துடங்கிய புன்னகை இன்னும் என் முகத்தில் நீரைந்து இருக்கிறது.

  வுங்கள் கதையில் ஹமைஇந்து இருந்த ஓவ்ஒரு வரியும் ஹன் கடந்த காலத்தை ஹன் கண் முன் ஹாலை பாய செய்ததற்கு நன்றி.

  ஹத்துடன் இந்த கதையில் வரும் செண்டிமெண்ட் பாடல்களும் ஹருமை.

  மொத்ததுல ஒங்க கதை சம பிட்டு.

  ReplyDelete
 14. @ வால்பையன் :
  பாத்தீங்களா வால் எவ்வளவு அப்பாவியா இருந்திருக்கேன் ...பிட்டுன்னு தெரியாமலே பிட் அடிச்சிருக்கேன் :))))) .
  நன்றிங்க.

  @ முகிலன்:
  வருகைக்கு நன்றி. இதுக்கு தாங்க உண்மைய யாரும் வெளிய சொல்றது இல்ல. சொன்னா வில்லத்தனம் சொல்லுடுவீங்க :)))

  @ Chitra :
  என்னோட friends எல்லாம் அப்படிதாங்க. அவங்களுகாகவே கோல்ட் மெடல் வாங்கலன்னா பாத்துகோங்களேன் :)))

  @ நாடோடி:
  ஆமாங்க இன்னும் வாதியார் கிட்ட இருந்து ஒத்துழைப்பு கிடச்சிருந்தா டிஸ்டிங்சண்'ல பாஸ் ஆயிருப்பேன் ;)) நன்றி

  @ LK :
  ஆமாங்க ரவுடி தான் ;)) நன்றி

  @ சென்ஷி:
  புன்னைகைக்கு நன்றிங்க

  @ சேட்டைக்காரன்:
  அவ்வவ்வ்வ்வ் இது எல்லாம் கொஞ்சம் ஓவர் சேட்டை..இதுக்கு பேரு தான் வஞ்ச புகழ்சியா?
  நன்றி

  @ஜெய்லானி :
  நன்றிங்க :)

  @அஹமது இர்ஷாத் :
  ரொம்ப நன்றிங்க

  @Kanagaraj :
  //நல்லா சுகமா தூங்குவேன், ஆனா ஜொள்ளு வுட மாட்டேன். //
  ஹ ஹ ஹ மீ தி டோடல் டேமேஜ்ஜ் கணக்க்ஸ் :))))))))

  @ S Maharajan :
  உண்மைதாங்க என்னோட +2 தேர்வுல நான் 89 % எனக்கே நம்பிக்கை இல்லை...உங்களுக்கு எப்படி வரும் :))))))))))

  @ஆனந்தி:
  நீங்க வேற அத நான் வெளியில சொன்னா ரொம்ப அசிங்கம் ஆயிடும்ங்க.
  anyways உங்க வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க :)

  @jani :
  நன்றி ஜானி :)

  ReplyDelete
 15. //பதினொன்றாம் வகுப்பில் (Elective groups) இருந்தது. முதல் இரண்டு க்ரூப்ல (கணிதம், வரலாறு, உயிரியல், இயற்பியல்) போன்ற பாடங்கள். மூன்றாம் குரூப் வணிகம், கணினி போன்றவை. நன்கு படிப்பவர்கள் முதல் இரண்டு க்ரூப்ளையும் என்னை போன்ற அறைந்த வாலுகள் மூன்றாவது க்ரூப்ளையும் சேர்ந்தோம்.//

  //படிக்காமலேயே தேர்வு எழுதினாலும் கூட எல்லா பாடங்களிலும் பாஸ் ஆக முடிந்த என்னால், இந்த accounts மட்டும் சுத்தி போட்டாலும் வரல. அப்படியும் accounts எக்ஸாம் அன்னைக்கு formulas எல்லாம் கையில எழுதிட்டு போவேன்..ஆனாலும் அந்த formula எங்க யூஸ் பணனும்னு தெரியாம நொந்து நூடுல்ஸ் ஆனது ஏன் கேக்குறீங்க//

  எல்லாருக்கும் ஒரே மாதிரி தான் நடக்கும் போலருக்கு.
  அன்னிக்கி வேப்பங்காயாய் இருந்த Accounts -ஆல தான் இன்னிக்கு துபாய்ல குப்பை கொட்ட முடியுது. ஏதோ ஆண்டவன் செயல்.

  ReplyDelete
 16. நினைவுகளை நல்லா தொகுத்து எழுதி இருக்கிங்க...

  //எல்லோருக்கும் அவங்க பெயில் ஆனது விட நான் பாஸ் ஆனது அவங்களால தாங்க முடியாத துயரமாவே இருந்துது.//.... நல்ல பிரென்ட்ஸ்!

  ReplyDelete
 17. உங்களுக்கு விருது இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்..

  http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html

  ReplyDelete
 18. http://encounter-ekambaram-ips.blogspot.com/2010/06/blog-post_13.html

  இந்த பதிவிற்கு உங்கள் பின்னூட்டத்தை வரவேற்கிறேன். நன்றி

  ReplyDelete
 19. வடிவேலு சொன்ன மாதிரி நல்லாவே ப்ளான் பண்ணி பண்ணுறீங்க

  உங்களையே plannning commission தலைவி ஆகிடலாம்!

  தாத்தாவுக்கு சிபாரிசு பண்ணுவோம்.

  ReplyDelete
 20. ஹ்ம்ம்ம்
  இந்த டெக்னிக்கெல்லாம் ஏன் எங்களுக்குத் தோணாமப் போச்சு ?

  ReplyDelete
 21. உங்க பதிவப்பற்றி என் பிளாக்ல எழுதியிருக்கேன்

  வந்து பாருங்க.

  http://riyasdreams.blogspot.com/2010/11/blog-post.html

  ReplyDelete
 22. naanga epdi theriuma bit adippom.
  naanga pen'la kaiyai pidichi eludhura edathula pen moodila bit eluthittu povom.......

  sorry naan ila. ennoda friends apdi adippanga... ok
  padhivu arumai.

  ReplyDelete
 23. // ஊருசனம் தூங்கிருச்சு,
  ஊத காத்தும் அடிச்சிரிச்சு,
  இந்த ரெண்டு பிசாசுங்க
  என்னை தூங்க விடலியே,
  படிப்பும் மண்டையில் ஏரலியே..//

  மிகவும் அருமை

  ReplyDelete