Monday, March 8, 2010

பைக் ஓட்டும் ஆசாமிகளுக்கு!!!

அசாரசமா யாரோட பைக்கிலும் அவளோ சீக்ரம் ஏறமாட்டேன்... பைக்'ன்னா கொஞ்சம் பயம் எனக்கு. அலுவலகத்துல இருந்து கிளம்பர நேரத்துல..ஆனந்த் (எங்க ஆபீஸ்ல வெப் டிசைனரா வேலை செய்றான்) "மேடம் வாங்க நான் ட்ரோப் பண்றேன்....நானும் உங்க ஏரியா பக்கம் தான் போறேன்" என்று சொல்லி அழைத்தான்.

கொஞ்சம் தயங்கினேன். நான் தயங்கிக்கிட்டு இருந்ததை பார்த்த அவன் "மேடம் பயப்படாம வாங்க பத்திரமா  கொண்டு போய் சேக்கிறேன்"ன்னு அசால்ட்டா சொன்னான்.

சரி பைக்ல போனா சீக்கரமா போய்டலாமேன்னு ஆசைப்பட்டு  அவனோட பைக்ல ஏறிட்டேன். ஏறினது தாங்க தாமிசம், சும்மா பிச்சிகிட்டு போகுது வண்டி. எனக்கு குடல் அப்படியே நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ..."ஆனந்த் கொஞ்சம் மெதுவா போ பயமா இருக்கு, இல்லைன்னா விட்டுடு நான் பஸ்லயே போறேன்"ன்னு கதரிகிட்டே இருந்த  என்னை "மேடம்...பயப்படாம வாங்க ...எத்தனை நாளா வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம், சும்மா கில்லி.. கில்லி மாதிரி உங்கள கரெக்டா சேர்க்கவேண்டிய இடத்துல சேர்த்துடறேன்". அவனோட ஸ்பீடும் அலும்பளும் தாங்கல... தெரியாத்தனமா ஏறிட்டோமேன்னு  நொந்துகிட்டு "என்ன கொடுமை சார் இது' ன்னு எனக்கு நானே டயலாக் சொல்லிகிட்டேன்...அந்த நேரத்து
லயும் என்னோட குசும்பு பாருங்க :)

இப்போ ஸ்டோரியோட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கோம். பைக் போய்கிட்டே தான் இருந்துச்சு சடன்னா கண்ணு மூடி கண்ணு  திறக்கரதுக்குள்ள நடு ரோட்ல விழுந்து கிடக்கிறேன். எழுந்து பார்த்தா, பைக் பக்கத்துல போயிட்டு இருந்த ஆட்டோ மேல மோதி விழுந்துகிடக்குது...Just Miss இல்லைன்னா எனக்கு  இன்னைக்கு சங்கு தான். யாரு  முகத்துல  முழிச்சேனோ இன்னைக்கு...

பைக்குக்கு  ஏதாச்சும் சேதாரம் ஆச்சான்னு  பாத்துகிட்டு இருந்த ஆனந்த்'யை
"ஆனந்த்  என்ன ஆச்சு."ன்னு கேட்டேன்.
 "சாரி மேடம்...லெப்ட்ல சூப்பர் பிகரு  கிராஸ் ஆச்சா...அதான் பாத்துகிட்டே வண்டிய தெரியாம லேசா  ரைட்டுல விட்டுட்டேன்னு.." சொல்லி முடிச்சான்.
என்னோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுகோங்க..
"அடப்பாவி...சிவனேனுதனடா  நான் போயிட்டு  இருந்தேன்...என்ன வற்புறுத்தி உன் வண்டில வர சொல்லி...இப்படி பண்ணிட்ட..அப்படி என்னடா சைட் வேண்டி இருக்கு உனக்கு" ன்னு  நொந்துகிட்டு..
வேணும் டி நல்லா வேணும் உனக்கு...இனிமேல் யாரோட பைக்லயாச்சும்  ஏறுவ.."Be careful" ன்னு எனக்கு நானே வடிவேலு ஸ்டைல்ல சொல்லிகிட்டேன்.

மக்களே (especially பைக் ஓட்டும் நண்பர்களே)  உங்களுக்கு அன்பான வேண்டுகோள்:
உங்க பின்சீட்டு காலியா இருந்தா ஜாலியா ஓட்டுங்க வேணாம்னு சொல்லல ..ஆனா என்னை  மாதிரி குடும்ப இஸ்திரி யாராச்சும் உட்கார்ந்திருக்கும் போது லெப்ட்ல பிகர பார்த்தா பைக்கை ஸ்டிரேட்டா ஓட்டாம  ரைட்ல விட்டுடாதீங்க.... எங்கள நம்பி ஒரு பெரிய  கூட்டமே இருக்கு..யோசிச்சுகோங்கோ!

8 comments:

  1. ஒரு தடவை என்னோட பைக்குலே வந்து பாருங்க! எந்த ஃபிகரு வந்தாலும் கண்டுக்க மாட்டேன். (கண்ணை மூடிக்கிட்டுத் தானே ஓட்டுவேன்)

    ReplyDelete
  2. ரோடுக்கு எதாவது அடிபட்டுச்ச?
    ஏதோ பைக்ல ஏறினோம சைலண்டா உக்காந்து போறத விட்டுட்டு, . எதாவது கதை பேசிகிட்டே இருந்த அப்படித்தான்..

    ReplyDelete
  3. கண்ணு முன்னாடி நடைந்தத கொண்டு வந்துடிங்க ...

    நடு ரோட்ல நீங்க விழுந்து கிடக்கிரப, ' பைக்குக்கு ஏதாச்சும் சேதாரம் ஆச்சான்னு பாத்துகிட்டு இருந்த, ஆனந்த்.... chacea இல்ல : - )

    உங்க கதை கரு கொலைகார கரு (ஆனந்த்) வா ல இருக்கு ... இந்த மாறி நிறைய பசங்க சுத்திட்டு இருகாங்கங்குறது உண்மை ........

    இந்த கிறுக்கலும் நல்லா இருக்கு அஷித்தா. உங்க எழுதும் பயணம் தொடர வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. ஆனந்தை மூக்கு மேல குத்தாமலா விட்டீங்க? :)

    ReplyDelete
  5. நல்லவேளை..வேறு எதுவும் பெரிதாக ஆகவில்லை..அதுவரை ஓகே.
    ஆனா பசங்கனா அப்படி தாங்க..:)

    ReplyDelete
  6. சேட்டைக்காரன்:
    //ஒரு தடவை என்னோட பைக்குலே வந்து பாருங்க! எந்த ஃபிகரு வந்தாலும் கண்டுக்க மாட்டேன். (கண்ணை மூடிக்கிட்டுத் தானே ஓட்டுவேன்)//

    கண்ணு திறந்தா மட்டும்...அது தெரியனும் இல்லல :))

    //Devarajan said...
    ரோடுக்கு எதாவது அடிபட்டுச்ச?
    ஏதோ பைக்ல ஏறினோம சைலண்டா உக்காந்து போறத விட்டுட்டு, . எதாவது கதை பேசிகிட்டே இருந்த அப்படித்தான்..//

    வாங்க சார் வாங்க ரொம்ப தான் அக்கறை ரோடு மேல..ரோடுக்கு கை காலு நசுங்கி போய் அப்போலோ ஹோச்பிடலா சேர்த்திருக்காங்க...ஹோர்லிக்ஸ் வாங்கிட்டு போய் நலம் விசாரிச்சிட்டு வாங்க.


    //nivi:
    கண்ணு முன்னாடி நடைந்தத கொண்டு வந்துடிங்க ...//

    விழுந்தது நானாச்சே..அது கூட முடியலன்னா எப்புடீஈஈஈஈஈஈஈஈஈ !
    நன்றி.


    //☀நான் ஆதவன்☀ said...
    ஆனந்தை மூக்கு மேல குத்தாமலா விட்டீங்க? :)//

    குத்துன குத்துல மூக்கு பஞ்சர் ஆயிடுச்சு..


    //Kanagaraj said...
    அன்பு அஷிதா, நீங்க அந்த பிகரை பாக்கலியா???
    நானும் ரொம்ப நாளா சம்ரான்-ல அழகான பொண்ணு வருமான்னு பாக்குறேன் !!!வரவே இல்லை, எல்லா பசங்களுக்கும் அதே வருத்தம் தான்!!!!அதனால அழகான பொண்ணை பார்த்தா உடனே சொல்லுங்க....உங்க எழுதும் பயணம் தொடர வாழ்த்துகள்....//

    நன்றி..

    //வினோத்கெளதம் said...
    நல்லவேளை..வேறு எதுவும் பெரிதாக ஆகவில்லை..அதுவரை ஓகே.ஆனா பசங்கனா அப்படி தாங்க..:) //

    நீங்களும் அப்படிதானா ....அவ்வ்வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ் வ்!

    ReplyDelete
  7. பெருசா எதுவும் அடிபடலையே? (குறைந்த பட்சம் கை உடையலை போலருக்கு, இல்லைன்னா இந்த இடுகை எழுதியிருக்க மாட்டீங்களே?)

    அந்த பையன் ஆனந்த் ரொம்ப நல்லவன், விபத்தையும் பண்ணிட்டு, உங்க கிட்டேயே வந்து சைட் அடிச்சதால தான் ஆச்சுன்னு அலட்சியமா சொன்னானே, கலக்கல் ;-) (அவனை அங்கேயே போட்டு சாத்தாம இங்க வந்து புலம்புற உங்கள என்ன சொல்றது?)

    ReplyDelete