டேய் மச்சான் நான் பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் டா...கம்பனிக்காக நாயா உழைக்கிறோம் ஆனா எந்த நாயும் நம்மள மதிக்க மாட்டேங்குது..
(நாய் என்னைக்கு உழைச்சிருக்கு சும்மா தானே வாலு ஆட்டிக்கிட்டு இருக்கும்...இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா )
பைனான்சு கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறன் டா..முதலீடு எங்க மாமா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.
டேய் மாப்பு அதெல்லாம் வேணாம் டா இப்போ இருக்கற லேட்டஸ்ட் trend ஆசிரமம் தாண்டா.....தனி பங்களா , நல்ல சாப்பாடு, சொகுசான வாழக்கை,அது மட்டும் இல்லாம சூப்பர் பிகரு எல்லாம் நம்மை தேடி வரும் மாப்பு...நமக்கு காலு அமுக்கி விடுவாங்க :))) சிம்பிலா ஏதாவது ஒரு சாமி பேரு சொல்லிட்டு ஜல்சாவா வாழ்க்கை நடத்தரத விட்டுட்டு பைனான்சு கம்பெனி அது இதுன்னு சொல்லிட்டு பொழக்க தெரியாதவனா இருக்கியே டா நீ ..
டேய் மாப்பு நம்ம ஆசிரமம் தொடங்கினா முதல்ல புல்லா centralised a/c போடணும் மாப்பு இல்லைனா ...'கதவை திற காற்று வரட்டும்' பதிலா ...sun tv காரன் கேமரா வந்துடும் .
டேய் மச்சான் ஒரு சந்தேகம் டா..எப்புடி டா அவளோ ஞான திருஷ்டி இருக்கற அவனுங்களுக்கே தெரியாமே video எடுப்பானுங்க...
அதான் மாப்பு அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் அவரு ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா போயிடுச்சாம் ...அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தானாம்...அந்த நேரம் பாத்து சன் tv காரன் பூந்துட்டான் .
என்ன டா மச்சான் இது... ஏதோ செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற!
(இது வரை போதும் இதற்கு மேல் அவர்கள் பேசியதை இங்கு பதுவு செய்ய விருமபவில்லை )
இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு நடுவில் இப்போது தலையோங்கி ஆடுவது இந்த சாமியார்கள் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் நம் இளைஞர் சமுதாயம் மத்தியில் ஒரு எதிர்மறை தாக்கம் (Negative Impact) உண்டாக்கி கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. கல்கி ஆசிரமத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்று பல பெற்றோர்கள் புகார் செய்வதாக செய்திகள் படித்தேன். பல ஆசைகளோடும் கனவுகளோடும் தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி இந்த ஆன்மிக பிரச்சனைகளில் சிக்கி நிலை தடுமாறுவதை கண்டு மனம் வேதனை அடைகின்றனர்.
இளைஞர்களின் மனதில், சாமியார்களின் வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், என அனைத்தும் உழைக்காமலேயே.. ஏதோ ஒரு கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்ற பயம் கலந்த வேதனை கூட சில சமயங்களில் வருவதுண்டு.
இப்படி போனால் நம் அப்துல் கலாம் கண்ட கனவு எப்படி நிறைவேறும்? நம் நாடு எப்படி வல்லரசு ஆகும்?.
**இளைஞர்களே நீங்கள் தான் நம் சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதை மறவாதீர்கள், இப்படி பட்ட சில பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் உங்களின் இலக்குகளை நோக்கி பயணம் செய்யுங்கள்.....
கடவுளை தேடி ..
வருத்தமாக இருக்கிறது, என்னுடைய பதிவில் இந்த செய்தியை பற்றி எழுதுவது.. தற்போது எல்லா பத்திரிகைகளும், தொலைகாட்சிகளிலும் , மற்றும் பதிவுலகமே எழுதிக் கொண்டிருக்கும் சூடான செய்தி பரமஹம்ஸ நித்யானந்தர் மற்றும் அம்மா(கல்கி) பகவான் பற்றி தான். இந்த இரண்டு செய்திகளும் நிறைய மாறுபட்ட கருத்துக்களை மட்டும் அல்லாமல் இத்தனை காலமாக இவர்களை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அதான் நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற என் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா? என்று இதை பற்றி இங்கே எழுதாமல் இருந்தேன் ஆனால் பேருந்தில் நடந்த சம்பவத்தை பார்த்து, இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் நாளை நம் நாட்டில் எந்த பிரச்சனை பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் விருப்பமே இல்லாமல் மனவேதனையுடன் எழுதியது தான் இந்தப் பதிவு.
சன் டிவி'யில் இந்த செய்தி வெளயிட்டபோது ஏன் நடிகையின் முகத்தை மட்டும் மறைத்தார்கள்?.காரணம்... விளம்பரம். “சாமியார் நித்தியானந்தருடன் இருந்த நடிகை யார்” – 7 மணி செய்திகளில் என்று விளம்பரம் தேடிக் கொண்டார்கள். பாலியல் காட்சிகளை பகிரங்கமாக வெளியிட்டு தங்களை நீதிமான்களாக காட்டிக்கொண்ட தொலைக்காட்சியை என்னவென்று சொல்லுவது .
இதில் நகைச்சுவை என்னவென்றால்..அந்த நடிகையின் பெயர் "ர"'வில் தொடங்கும் என்பதை மட்டும் சொல்லியது தான். அப்பொழுது மக்கள் மத்தியில் நிலவி கொண்டிருந்த குழப்பமே நித்தியானந்த சுவாமிகளின் லீலைகள் பற்றி அல்ல..யாரு அந்த நடிகை என்பது தான். நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்களா?. இன்று தமிழ்நாட்டின் மூளை முடுக்கு என்று எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை தான் , டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு, அடுத்தவர்களின் அந்தரங்கம் மீது நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது பாருங்கள்.
......முடிவில் இத்தகைய பொது மனிதர்கள் இந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடுவது தவிர்க்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.
கடவுள் 'உண்டு' 'இல்லை' என்பதை நான் வாதிக்க விரும்பவில்லை , ஆனால் இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவள் நான், அப்படி இருக்க இந்த சாமியார்கள் இப்படியான சில சர்ச்சைகளில் ஈடுப்பட்டு அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதாக மனம் மிகவும் சங்கடம் அடைகின்றது .
யாரை குற்றம் சொல்வது ஏமாற்றுபவர்களையா ஏமாறுபவர்களையா?..நம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் அதற்க்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள், மனதில் இருக்கும் சுமையை இறைவனிடம் இறக்கிவைத்து வந்தால் மனம் லேசாகும் என்ற நமிக்கையில். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் மக்கள் கடவுளை நம்புவதை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.
இதைதான் விவேகானந்தர் சொன்னார் ,கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார் என்று.
கீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றி லும் சொல்லப்படுவது இது தான்..
கடவுளை நம்பு! உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு! மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.
யாரை குற்றம் சொல்வது ஏமாற்றுபவர்களையா ஏமாறுபவர்களையா?..நம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் அதற்க்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள், மனதில் இருக்கும் சுமையை இறைவனிடம் இறக்கிவைத்து வந்தால் மனம் லேசாகும் என்ற நமிக்கையில். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் மக்கள் கடவுளை நம்புவதை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.
இதைதான் விவேகானந்தர் சொன்னார் ,கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார் என்று.
கீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றி
கடவுளை நம்பு! உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு! மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.
:)))))
ReplyDeleteஅந்த இளைஞர்களின் பேச்சு............!!!!!!!!
ReplyDeleteஇலகுவில் தப்பித்துக்கொண்டு விட்டு, பொறுப்பைத் தட்டிக்கழிக்கிற முயற்சியில் இது போன்ற பேச்சுக்களும் ஒன்று. தன்னைச் சுற்றியிருக்கிற உலகம் மோசமாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டு, தனது தவறுகளையும் நியாயப்படுத்துகிற சால்ஜாப்பு வேலை இது. நிமிர்ந்து நின்று கேள்வி கேட்க பயந்து, "நமக்கேன் வம்பு?" என்று குனிந்து குட்டுப்பட்டுப் பழகுவது அவர்களுக்கு வசதி; அடுத்து வரும் தலைமுறைக்கு....?
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!
ஜ்ஜூடா இருக்கீங்களே :)
ReplyDeleteசமூக பொறுப்புடன் கூடிய நல்ல பதிவுங்க. வாழ்த்துகள்
கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார்.
ReplyDeleteNice One
ReplyDeleteஆரோக்கியமான பதிவு அம்மணி.
ReplyDeletevery thoughtful post.. nicely written..
ReplyDeleteIt is high time that we stop blaming these godmen and instead do some introspection.. Like you said the solution for all our problems is within ourselves.. If one has personal issues, one shld rather seek a psychologist or a psychiatrist rather than a seer... No human is neither more nor lesser divine than thyself..
mythees //
ReplyDeleteஉங்க புன்னகைக்கு நன்றி..
சேட்டைக்காரன் said...அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!//
கொஞ்சம் பயந்துகிட்டே எழுதின பதிவு இது...உங்க கிட்ட இருந்து இந்த பின்னூட்டம் பாத்தவுடனே அந்த பயம் தீர்ந்தது...மிக்க நன்றி.
☀நான் ஆதவன்☀ said...
ஜ்ஜூடா இருக்கீங்களே :)
சமூக பொறுப்புடன் கூடிய நல்ல பதிவுங்க. வாழ்த்துகள்//
நன்றி ஆதவன்..ஆமா கொஞ்சம் ஜ்ஜூடா தான் இருந்தேன்...அப்புறம் லெமன் ஜூஸ் சாப்டேன் சரி ஆயிட்டேன் :))
Devarajan said...
கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார்.//
நன்றி ஜி..
Anonymous said...
Nice one //
Hi..Thank you.
அஹமது இர்ஷாத் said...
ஆரோக்கியமான பதிவு அம்மணி.//
நன்றிங்க இர்ஷாத்..
kurrodu said...
very thoughtful post.. nicely written..
It is high time that we stop blaming these godmen and instead do some introspection.. Like you said the solution for all our problems is within ourselves.. If one has personal issues, one shld rather seek a psychologist or a psychiatrist rather than a seer... No human is neither more nor lesser divine than thyself..//
Hey Deepak. Thanks for your comments. //No human is neither more nor lesser divine than thyself// this is true...sad thing is nobody realises it. Keep reading my blogs and keep posting your comments :))
நல்லா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteபொதுவா இந்த மாதிரி சமுக பிரச்சனைகளுக்கு கருத்து சொல்றத விட்டு ரொம்ப நாள் ஆச்சு... சொல்லி, எழுதி வெறுப்பு தான் மிஞ்சுச்சு...
ReplyDeleteஇருந்தாலும், ஆஷித வோட social interest ஆக சொல்றேன்...
ஆஷிதா, நீங்க யாருக்கு இங்க அறிவுரை சொல்றீங்க... இன்றைய இளைஞர்களுக்கா...
முன்னாடி தான், இளைஞர்கள் அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்களோ இல்ல தெரிந்தவர்களோ.. சாமியார் ta போனா கிண்டலும் கேலியும் பண்ணாங்க... இப்ப பாருங்க... ஆன்மீகவாதி ta போற கூட்டத்துல்ல பாதிக்கு மேல நம்ம இளைஞர்கள் தான்...
ஒரு interview ku போனாலும் சரி, இல்ல ஒரு business ஆரம்பிச்சாலும் சரி... ஏன் ஒரு figure ta propose பண்ண போன கூட சாமியார் ta advice கேக்குறாங்க... காரணம், தோல்வி மேல உள்ள பயமும், தன்னம்பிக்கை இன்மையும்...
இதெல்லாம் பாக்குறப்போ ஒரு பழ மொழி தான் நியாபகம் வருது...
கேன பய ஊர்ல கிறுக்கு பய நாட்டாமை...
உங்க ஆதங்கம் புரிகிறது!
ReplyDeleteHi Ashitha,
ReplyDeleteVery Good.
My mom's views: பரமஹம்ஸ நித்யானந்தர் is correct. After all, he is a man, he has feelings. He is not wrong in enjoying his life with a woman. He did not compell anyone to have a sex with a woman.
The problem will stop only when we believe only God, stopping believing Gurus, Priests.
உங்க போன் நம்பர் கிடைக்குமா?
ReplyDeleteவெளியூர்காரன் said...
ReplyDeleteஉங்க போன் நம்பர் கிடைக்குமா?//
அவசர உதவிக்கு 100' யை தொடர்புகொள்ளுங்கள். :-)
@வெளியூர்காரன் said...
ReplyDeleteஉங்க போன் நம்பர் கிடைக்குமா?
//
வெளியூருனாவே நினைவுக்கு வருவது சிகப்பு தொப்பி..ஆனா.. எவனோ வெளியூர் பேர யூஸ் பண்ணி போட்டிருக்கானுக..
வெளியூரு .. பார்த்துக்க...
This comment has been removed by a blog administrator.
ReplyDelete\\மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.\\
ReplyDeleteரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க..
வாழ்த்துகள்
வாழ்த்துகள்
ReplyDeleteஅது என்னங்க இப்படி நாய் உழைக்கலைன்னு சொல்லிப்புட்டீங்க!!!!
ReplyDeleteவீட்டுக் காவலுக்கு வளர்க்கும் நாய்கள் காவல்காக்கும் வேலையைச் செய்யுதுங்களே.
எங்க நியூஸியில் ஆட்டுப்பண்ணைகள் வச்சுருக்கறவங்க நாய்களைத்தான் நம்பி இருக்காங்க. நாலைஞ்சு நாய்கள் அம்பூட்டு ஆடுகளையும் மடக்கி ஒரு இடத்துலே கொண்டு சேர்த்துரும்.
ஒவ்வொரு பண்ணையிலும் இருபதாயிரம் ஆடுகளுக்குக் குறையாம இருக்கும்.
நாட்டின் ஜனத்தொகையைப்போல் ஆடுகளின் எண்ணிக்கை 12 மடங்கு.
@@நிகழ்காலத்தில்... said... //
ReplyDeleteநன்றிங்க..
@@ஆயில்யன் said...
ஆயில்ஸ் பாஸ் உங்கள் வருகைக்கு நன்றி !
@@துளசி கோபால் said..
அருமையான விஷயம் சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி உங்க கருத்துக்கு.
@@ஜெய்லானி said...
விருதுக்கு மிக்க நன்றி
//கீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றிலும் சொல்லப்படுவது இது தான்..
ReplyDeleteகடவுளை நம்பு! உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு! மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.//
அஹம் ப்ரம்மாஸ்மி என்பதை மிக எளிமையான வார்த்தைகளில் கூறிவிட்டீர்கள். நன்றி.
anbudan
ram
www.hayyram.blogspot.com
welcome ashidha.
ReplyDeleteஅஷிதா,
ReplyDeleteஅருமையான சமூக அக்கறையுடன் கூடிய உரை.
உங்களுடைய எழுத்து பணி தொடர என்னுடைய நல்வாழ்த்துக்கள் :-))
என்றும் அன்புடன்
கனகராசு
ரொம்ப ஃபீல் பண்ணிருக்கிங்க...புரியுது.
ReplyDeleteகமல் பேசின ஒரு நல்ல வசனம் நினைவுக்கு வருகிறது.
ReplyDelete"கடவுள் இல்லைன்னு சொல்லுறான் பாரு அவன கூட நம்பலாம். ஆனா, நான் தான் கடவுள்னு சொல்லுறான் பாரு. அவன என்னைக்குமே நம்பாத."