Thursday, June 17, 2010

நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா ?

என்னோட நண்பர் ஒருத்தர் இன்னைக்கு சாட்ல வந்து "பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. இப்படியே போனா பதிவுலகத்துல எல்லோரும் உங்கள மறந்துடுவாங்க"ன்னு குண்டு தூக்கி போட்டு போய்ட்டாரு. அவரு பிரபல பதிவர் வேற..பழம் தின்னு கொட்டைய போட்டவரு சொன்னா உண்மையாதான் இருக்கும். அப்போவே ஆரம்பம் ஆயிடுச்சு பதிவு போடணும்ன்ற டென்ஷன்.


எப்படி தான் தினம் ஒரு பதிவு, வாரத்துல மூணு நாலுன்னு சர்வ சாதாரணமா போடறாங்களோ தெரியல. சீனியர்  பதிவர்கள் கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு  கேட்டேன். உட்காந்து  யோசிப்போமில்ல'ன்னு ஒருத்தர், குந்திக்கினு யோசிப்போமிலன்னு ஒருத்தர்  (உக்காந்து யோசிக்கிறதும் குந்திக்கினு யோசிக்கறதும் ஒன்னுதானே ன்னு கேக்குற ரகமா இருந்தா இப்படியே எஸ் ஆயிக்கலாம்..உங்க அறிவுக்கு ஏத்த இடம்  இது இல்லை) ரூம் போட்டு யோசிப்போன்னு இன்னொருத்தர், மொட்டைமாடில மல்லாக்கு படுத்து வானம் பார்த்து யோசிப்போம்ன்னு ஒருத்தர், குப்புற படுத்திக்கிட்டு யோசிப்போம்னு சிலர்....ஹ்ம்ம் இன்னும் சில ரகளையான பதில்கள் வந்துது அது எல்லாம் இங்க போட முடியாதுங்கறதால போடல.  

பதிவர்களே என்னோட கேள்வி எல்லாம் இது தான். ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி பதிவு போடறது. இதை எல்லாம் கேட்டு  எனக்கு பதிவு என்ன எழுதணும்ன்னு யோசனை போய் நாம எந்த பொசிஷன்ல யோசிக்கனும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். பரிட்சையில கூட இவளோ டென்சன் ஆனது இல்ல...ஏகப்பட்ட டென்சன் ஒரு பதிவு போடறதுக்குள்ள. பரிட்சையிலயாவது  காப்பி  அடிச்சு பாஸ் பண்ணிடலாம் ஆனா  இங்க காப்பி  அடிச்சா காப்பிரைட்  பிரச்சனை பண்றாங்க.

பதிவுலகத்தையே அலசி ஆராய்ஞ்சதுல ஒரு பொசிஷன்  கிடைச்சது. இதுக்கும் ஏகப்பட்ட டிமாண்டுன்னு கேள்விப்பட்டு  விட கூடாதுன்னு ஏகப்பட்ட ரெகமென்டேசன்ல வாங்கீருக்கேன்.



சும்மா சொல்லகூடாது இந்த பொசிஷன்ல யோசிக்கும்போது மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்து அறிவு கண்ணு தானா திறக்குது. அப்படியே சிந்தனைகள் அருவியா ஊத்துது. இப்படி தான் நேத்து யோசிக்கும்போது ஒரு டவுட் வந்துது. அதை  நான் முகபுத்தகத்திலும் (facebook)   ஆர்குட்லயும் (orkut)  போட்டேன்.

"எனக்கு  ஒரு டவுட்... மனிதர்களுக்கு "SHUT UP"  கம்ப்யூட்டர்க்கு ஏன் "SHUT DOWN"? . செய்யபோற வேல ஒன்னுதானே.."

இந்த கேள்விக்கு சில நண்பர்களின் பதில் மிக சுவாரசியமாக இருந்தது.


//ரொம்ப ஜிம்பிள்
மனுசனுக்கு வாய் மேல இருக்கு
அதான் ஷட் அப்


மேசைக் கணினியில் சிபியு மேசைக்குக் கீழ
இருக்கு அங்க குனிஞ்சுதான் ஷட் டவும் செய்யணும்
அதான் ஷட் டவுண். மேதைகளின் மேதை//

இவரு நெசமாலுமே மாமேதை தான். என்னமா பட்டைய கெளப்புறாரு :))

//லேப்டாப் வேலை முடிஞ்சா அதை மூடி வக்கிறோம். அதுனால “DOWN"..
மனுசன் வேலை முடிஞ்சா எந்திருச்சு போய்டுவான். அதுனால “UP"//

மக்கா.. எப்படிதான் இப்புடி எல்லாம் சிந்திக்கிறாங்களோ..

//கம்ப்யூட்டர் வேலை முடிஞ்சா அதுக்கு பீஸ் புடுங்கிடுறோம்... Down
ஆனா நமக்கு வேலை முடிஞ்சதுக்கு அப்புறாம் தான் பல்பே எரியுது Up//

//மனிதர்களை shut up னு சொன்னாத்தான் பேசவே ஆரம்பிப்பாங்க :)
ஆனா கம்ப்யூடர் அபப்டியில்ல ... shut down பண்ணின உடனே அமைதி ஆகிடும் :))//
எப்போவுமே எனக்கு ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். நம் நாடு  வல்லரசு ஆகுமான்னு. நம்ம ஆளுங்க இப்படி எல்லாம் யோசிக்கறது பார்த்து அந்த கவலை போய்டுச்சு இப்போ.

புனைப்பெயர் தேவை..
எல்லோரும் அவங்களுக்கு ஒரு புனை பெயர் வச்சுக்கிட்டு தான் பதிவு எழுதறாங்க. நாமளும் ஏன் ஒரு புனைவு பெயர் வச்சுக்க கூடாதுன்னு யோசிச்சு சில புனைபெயர்கள் தேர்வு செய்திருக்கேன்.
கருவாச்சி காவியம், கருத்து கருத்தம்மா, கருத்தம்மா கருத்துக்கள் etc etc . உங்களுக்கு ஏதேனும் புனை பெயர் தோன்றினால் சொல்லுங்க.
(இதை படிச்சிட்டு, "நீங்க கருப்பா இருப்பீங்களா?" ன்னு கேட்டு பின்னூட்டம் போடறவங்க, ஒரு வருசத்துக்கான fair & lovely எனக்கு குரியரில் அனுப்பி வைக்கணும் சொல்லிட்டேன்.)

சும்மா சொல்றேன் தெரிஞ்சுக்குங்க...
நாணயத்தை சுண்டிப்போடற பழக்கத்தை ஏற்படுத்தியவரு யாருன்னு கேட்டா உடனே சூப்பர் ஸ்டாருன்னு சொல்றாங்க..ஏன்னு கேட்டா அவருதான் "சிவாஜி" படத்துல படு ஜோரா பூவா தலையா சுண்டி போடுவாறாம். குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்.

என்னா நக்கலுஒரு நிமிட கதை...
என் நண்பன் சக்தி BSC (Electronics) படிச்சு முடிச்சிட்டு வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு நாள் திடீர்னு NOKIA கம்பெனில இருந்து இண்டர்வீயுக்கு அழைப்பு வந்துது. சக்திக்கு பயங்கர சந்தோசம். அடுத்த நாளே  இண்டர்வீயுக்கு வர சொன்னாங்க. மறுநாள் காலைல சக்தி அதிசயமா சீக்கரம் எழுந்திரிச்சு  நல்ல தோச்சு இஸ்திரி பண்ணின டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான்.
கம்பெனிக்கு போனவுடனே 10 நிமிஷம் வெயிட் பண்ண சொன்னாங்க. 10 நிமிஷம் கழிச்சு இண்டர்வீயு ரூம்ல இருந்து அழைப்பு வரவே அவனும் உள்ளே போனான்.
சக்தி உள்ள நுழைஞ்சதும் அவனோட பைல் கொஞ்ச நேரம் புரட்டி பாத்துட்டு , வழக்கம் போல படிப்பு, குடும்ப பின்னணி, வேலை செய்த முன்னனுபவங்கள் போன்ற  தகவல்கள் எல்லாத்தையும்  கேட்டு அறிந்தார் HR. அவருக்கு சக்தியின் பதில்கள் கொஞ்சம் பிடித்து போகவே அடுத்த கேள்வி கேட்டார்.
''ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிப்பார்ட்மென்டுல வேலை பாக்கணும்ன்னு விருப்பம் இருக்கா?" 
"எஸ் சார். முடிஞ்சா கம்பெனி CEO இல்லன்னா அட்லீஸ்ட் ஜெனரல் மேனேஜரா  மேனேஜ்மென்ட்ல இருக்க விருப்பம்.."
இதை  கேட்ட  அந்த HR மேனேஜர்க்கு அதிர்ச்சியும் கோபமும் பொங்க.....
''உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?'  என்றார்..
சக்தி ஒரு நொடி யோசித்து விட்டு ..
''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?'' 

நாங்களும் கவிதை எழுதுவோம்ல..
வரம் கேட்டேன் இறைவனிடம்
இரவோடு இரவாக 
என்னை த்ரிஷாவாக
மாற்றிவிட சொல்லி..
மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
த்ரிஷாவின்  மடியில் உயிர் பிரியும் போது!!!
என்று நீ சொன்ன அந்த
நொடிப்பொழுதில் !

சும்மா சிரிங்க..
மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..
மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

ஹ ஹி மொக்கை வேணுமா...
நேத்து ராத்திரி டி.வி'ல வானிலை அறிக்கை கேட்டாயா?
நான் கேட்கலை, அவங்கதான் சொன்னாங்க.

என்னடா இது தலைப்புக்கும்  பதிவுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு கேக்குறீங்களா?. இப்போ இதாங்க பாஷன். அது எல்லாம் ஒத்துக்கப்படாது  பதிவுக்கு பொருதம்மா தான் தலைப்பு வைக்கணும்ன்னு அடம் புடிச்சா. கடைசி வரை படிச்சிட்டு கமெண்ட் போடாமா போறியே நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனான்னு கேட்ப்பேன். இப்போ  ஒத்துபோகுதுல்ல..

37 comments:

  1. க‌ல‌ந்துக‌ட்டி அடிச்சிருக்கீங்க‌,,,, "சும்மா சிரிங்க‌" ந‌ல்லாவே சிரிச்சேன்..

    ReplyDelete
  2. //எஸ் சார். முடிஞ்சா கம்பெனி CEO இல்லன்னா அட்லீஸ்ட் ஜெனரல் மேனேஜரா மேனேஜ்மென்ட்ல இருக்க விருப்பம்.."
    இதை கேட்ட அந்த HR மேனேஜர்க்கு அதிர்ச்சியும் கோபமும் பொங்க.....
    ''உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?' என்றார்..
    சக்தி ஒரு நொடி யோசித்து விட்டு ..
    ''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?''//


    ந‌ல்லாவே சிரிச்சேன் kalkitinga ponga
    valthukal

    ReplyDelete
  3. /////////சும்மா சொல்லகூடாது இந்த பொசிஷன்ல யோசிக்கும்போது மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்து அறிவு கண்ணு தானா திறக்குது.////////


    ஏலே மக்கா !
    அறிவு கண்ணு திறந்தா பெறவா இல்லைல கீழ கீழ விழுந்து கண்ணு ஒரே வாக்குல மூடிப்போகிடாம பார்த்துல . கவிதை கலக்கல் .

    ReplyDelete
  4. நீங்க உக்கார்ந்துக்கிட்டு யோசிச்சீங்களோ...... தலை கீழே தொங்கிட்டு யோசிச்சீங்களோ...... எங்களை நல்லா சிரிக்க வச்சுருக்கீங்க.....
    பி .கு. நான் அடுத்த பதிவுக்கு என்ன எழுதலாம்னு முத பாரா மாதிரி தான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன்..... வாக்கிங் அப்போ..... ஹா,ஹா,ஹா......

    ReplyDelete
  5. நாங்களும் கவிதை எழுதுவோம்ல..
    வரம் கேட்டேன் இறைவனிடம்
    இரவோடு இரவாக
    என்னை த்ரிஷாவாக
    மாற்றிவிட சொல்லி..
    மரணம் கூட சுகம் தான்
    எப்போது தெரியுமா?
    த்ரிஷாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
    என்று நீ சொன்ன அந்த
    நொடிப்பொழுதில் !


    கவிதை சூப்பரு...

    ReplyDelete
  6. //ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி பதிவு போடறது //

    என்னங்க இப்பிடியா அப்பாவியா இருப்பீங்க . என்னுடைய பதிவுகளை படிச்சிருந்தா இந்த சந்தேகமே உங்களுக்கு வந்திருக்காது. .ஹய்யோ..ஹய்யோ...ஹி..ஹி..

    ReplyDelete
  7. @@@நாடோடி--//க‌ல‌ந்துக‌ட்டி அடிச்சிருக்கீங்க‌,,,, "சும்மா சிரிங்க‌" ந‌ல்லாவே சிரிச்சேன்.. //

    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்

    ReplyDelete
  8. நல்லா இருக்குங்க.
    அன்புள்ள ஜெய்லானிக்கு வணக்கம். எங்க பாத்தாலும் வணக்கம் சொல்றதுதான் தமில் கழாச்சாரம்:-)

    ReplyDelete
  9. ஸ்ஸ்ஸ்ப்பா முடியல.....

    ReplyDelete
  10. //சும்மா சிரிங்க..//
    நிஜமாவே சிரிச்சேன்

    ReplyDelete
  11. ///எல்லோரும் அவங்களுக்கு ஒரு புனை பெயர் வச்சுக்கிட்டு தான் பதிவு எழுதறாங்க. நாமளும் ஏன் ஒரு புனைவு பெயர் வச்சுக்க கூடாதுன்னு யோசிச்சு சில புனைபெயர்கள் தேர்வு செய்திருக்கேன்.
    கருவாச்சி காவியம், கருத்து கருத்தம்மா, கருத்தம்மா கருத்துக்கள் etc etc . உங்களுக்கு ஏதேனும் புனை பெயர் தோன்றினால் சொல்லுங்க.
    (இதை படிச்சிட்டு, "நீங்க கருப்பா இருப்பீங்களா?" ன்னு கேட்டு பின்னூட்டம் போடறவங்க, ஒரு வருசத்துக்கான fair & lovely எனக்கு குரியரில் அனுப்பி வைக்கணும் சொல்லிட்டேன்.) ////

    சுஜாதா பாணியில் கலக்குறீங்க...நிறைய fair & lovely வந்துச்சுன்னா எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க...:D

    ReplyDelete
  12. அக்கா கலக்குறீங்க சூப்பர் பதிவு

    ReplyDelete
  13. //மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..
    மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது.//

    18+ nu eccharikkai podanum. illati enna mathiri kulandainga padicha enna aagum

    ReplyDelete
  14. எப்படியோ ஒரு பதிவை போட்டுட்டீங்க.

    அப்படியே என் வலை தளத்துக்கு வந்து ஒரு கமெண்ட் போட்டுட்டு போங்க. இல்லேன்னா நானும் உங்கள திட்ட வேண்டி இருக்கும். நீங்க திட்டுன மாதிரியே.

    ReplyDelete
  15. //கடைசி வரை படிச்சிட்டு கமெண்ட் போடாமா போறியே நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனான்னு கேட்ப்பேன்.// போட்டுட்டோமில்ல நாங்களும் பெரிய மனிசன்னு நிருபிச்சிட்டுமில்ல..

    அப்படியே இதையும் பார்த்துட்டு ஏதாவது சொல்லுங்க அப்பதான் நாங்க நம்புவோம் நீங்க பெரிய்ய்ய்...
    http://riyasdreams.blogspot.com/2010/06/blog-post_17.html

    ReplyDelete
  16. சத்தியமா நான் பெரிய மனுசன் இல்லீங்கோ :))

    ReplyDelete
  17. //அவரு பிரபல பதிவர் வேற//

    யாருங்க அந்த ப்ராபள பதிவர்!

    ReplyDelete
  18. //ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி//


    பெரிய மரத்துல கயிறு கட்டி தொங்கிகிட்டே யோசிங்க, சூப்பரா ஐடியா வரும்!

    ReplyDelete
  19. //கருவாச்சி காவியம், கருத்து கருத்தம்மா, கருத்தம்மா கருத்துக்க//

    யாருங்க உங்களை கருப்புன்னு சொன்னது, நீங்க ”யானை சிகப்பு”!

    ReplyDelete
  20. //குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட். //

    பின்ன ஏன் விளையாட்டு தொடங்கும் போது டாஸ் போடுறாங்க, நாம அதுக்கு பின் தானே குழம்புறோம், எவ்ளோ பணம் வாங்கி அவுட் ஆகியிருப்பான்னு!

    ReplyDelete
  21. //வரம் கேட்டேன் இறைவனிடம்
    இரவோடு இரவாக
    என்னை த்ரிஷாவாக
    மாற்றிவிட சொல்லி..
    மரணம் கூட சுகம் தான்
    எப்போது தெரியுமா?
    த்ரிஷாவின் மடியில் உயிர் பிரியும் போது!!!
    என்று நீ சொன்ன அந்த
    நொடிப்பொழுதில் ! //


    யாருங்க உங்க கிட்ட அப்படி சொன்னது, அவனாக மாற்ற சொல்லி கடவுளிடம் ஆண்கள் கூட்டம் கியூவில் நிற்குதாம்!

    ReplyDelete
  22. //சும்மா சிரிங்க..
    மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..
    மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது.. /


    ஹாஹாஹாஹா!
    இதுக்கு எட்டு வருசம் வெயிட் பண்ணனுமா!?

    ReplyDelete
  23. ஹ்ம்ம்.... டேமேஜர் எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா

    ReplyDelete
  24. @நாடோடி
    நன்றிங்க..

    @S Maharajan :
    நன்றிங்க..

    @.பனித்துளி சங்கர் .♥..♪ ♫
    ஹ ஹ ஹ அதெல்லாம் பாத்துப்போம் கவலை வேணாம்.

    @சித்ரா
    பதிவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி யோசிக்கிறோமே..
    நன்றிங்க.

    @தமிழன்
    ரொம்ப நன்றிங்க உங்க வருகைக்கும் கருத்துக்கும்.

    @ஜெய்லானி
    ஹ ஹ ஹ ரொம்பவே அப்பாவி தாங்க. நன்றி..

    @ Dr.P.Kandaswamy
    நன்றிங்க

    @ Mugilan
    என்னாலையே முடியல..ஹ்ம்ம் உங்களால முடியறது கஷ்டம் தான். அதுக்கெல்லாம் தெறமை வேணும்..

    @செப
    சுஜாதா பாணியில் கலக்குறீங்க...நிறைய fair & lovely வந்துச்சுன்னா எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்க...:D //
    போங்க பாஸ்....எனக்கே பத்தாது அம்புட்டு கலரு . உங்களுக்கு வேறயா?..

    @சிட்டுக்குருவி
    நன்றி தங்காய்

    @LK
    ஹ ஹ உங்க விலாசம் குடுங்க feeding bottle குரிஎர்ல அனுப்பி வக்கறேன். நன்றி..

    @தமிழ் உதயம்
    அவ்வ்வ்வவ் வந்துட்டா போச்சு. அதுக்குன்னு ஆள வச்சு அடிச்சிடாதீங்க.

    @Riyas
    சரிங்க பாஸ்...

    @சுட்டபழம்
    அது எங்களுக்கு தெரியாதா...உங்கள எப்போ சொல்லி இருக்கேன் பெரிய மனுஷன்னு. :))))))

    @Ahamed இர்ஷாத்
    :))

    @வால்பையன்
    நீங்களே கண்டுபிடிங்க..அந்த பிரபல பதிவர்க்கு பெரிய வாலு இருக்கும்.

    //யாருங்க உங்களை கருப்புன்னு சொன்னது, நீங்க ”யானை சிகப்பு”! //
    யானை நெருப்புல குதித்திடுச்சா..பின்ன எப்படி செவப்பு :))))

    //ஹாஹாஹாஹா! இதுக்கு எட்டு வருசம் வெயிட் பண்ணனுமா!? //
    பாவிபய புள்ள 8 வருஷம் வீணாக்கிடுச்சு..:))))

    உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க..அந்த பிரபல பதிவர் யாருன்னு கண்டுபுடிச்சி சொல்லுங்க.

    ReplyDelete
  25. அப்படி ஒரு பிரபல பதிவரே இல்லையாம், வேற யாரோ கிளம்பிவிட்ட வதந்தி என வட்டார செய்திகள் சொல்கின்றன!?

    ReplyDelete
  26. //ரூம் போட்டு யோசிப்போன்னு இன்னொருத்தர், மொட்டைமாடில மல்லாக்கு படுத்து வானம் பார்த்து யோசிப்போம்ன்னு ஒருத்தர், குப்புற படுத்திக்கிட்டு யோசிப்போம்னு சிலர்//


    நாங்களெல்லாம் பொண்டாடிகிட்ட திட்டு வாங்கிடே யோசிப்போம் அப்பதான் கமெண்ட் கூட வரும்
    //ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி பதிவு போடறது//

    அதனால்தான் நாங்க பதிவே போடரதில்லை கமெண்டோட சரி

    ReplyDelete
  27. this is the first time i am reading your blog though i have been your follower for a while. It is great. I dont have a tamil font. great....simply great....

    ReplyDelete
  28. "பிரபல", "முக்கிய" போன்ற வார்த்தைகளை கேட்டால் எனக்கு "சூரியன்" படத்தில் ஒரு கவுண்டமணி ஜோக் நினைவுக்கு வரும்:

    ஒருவர்: ஏங்க, விஷயம் தெரியுமா? சேலத்தில் முக்கிய பிரமுகர் கைதாம்.
    கவுண்டமணி: ஏன், கோயமுத்துர்ல முக்குனா கைது பண்ண மாட்டங்களா?

    ReplyDelete
  29. ஒரு சிறப்ப்பு மொக்கை.

    சரத்குமார் நடிச்ச 'மானஸ்தன்' என்ற படம் வெளியான சமயம். படம் அவ்ளோ கடி போல.

    "ரத்த" காயங்களுடன் ஒரு நண்பன் கேட்டான்: மச்சி மானஸ்தன் படம் பாத்தியாட?
    நான்: இல்லை, என்ன ஆச்சு?
    நண்பன்: நீ உண்மையிலேயே ஒரு மானஸ்தன் டா.

    ReplyDelete
  30. // குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு
    பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர்
    உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட். //

    எனக்கும் இந்த பழக்கம் இருக்கு..
    நாணயத்தை சுண்டி போட்டு தலை
    விழுந்தாதான் எந்த ஒரு விஷயத்தையும்
    செய்வேன்..

    ஆனா தலை விழற வரைக்கும்
    மறுபடி, மறுபடி சுண்டுவேங்கறது
    வேற விஷயம்...

    ReplyDelete
  31. /ஹ ஹ உங்க விலாசம் குடுங்க feeding bottle குரிஎர்ல அனுப்பி வக்கறேன்//

    ohh anuptta pocchu

    ReplyDelete
  32. நானும் பெரிய மனுஷன் தான், நானும் பெரிய மனுஷன் தான், நானும் பெரிய மனுஷன் தான்!!!

    நீங்க உக்காந்து குந்திகினு தலை கீழா யோசிச்சி ஏதேதோ கடி ஜோக்கு, புனைப்பெயர், நாணய தகவல், ஒரு நிமிட கதை, கவிதை, மொக்கை சொல்லி இருக்கீங்க!!!! பெரிய கலவையா இருக்கு!!!

    நான் நெனைக்கிறேன் உங்களுக்கு "செகப்பு சிரிப்பழகி" புனைப்பெயர் நல்லா இருக்கும் (Fair & Lovely வேண்டாம்)

    உங்க அட்ரஸ் குடுங்க, உங்களுக்கு சிரிப்பு போலீஸ் காமெடி சி டி அனுப்புறேன், அத பாத்து படிச்சி உங்க பின்னால வருற சந்ததிகளுக்கு தெரியபடுத்துங்க!!!!

    ஒரே சிரிப்பா வருது உங்க காமெடி பதிவை பாக்கும் போது, மிக்க நன்றி!!!!

    என்றும் அன்புடன்
    கனகராசு

    ReplyDelete
  33. //உங்க அட்ரஸ் குடுங்க, உங்களுக்கு சிரிப்பு போலீஸ் காமெடி சி டி அனுப்புறேன், அத பாத்து படிச்சி உங்க பின்னால வருற சந்ததிகளுக்கு தெரியபடுத்துங்க!!!!//

    யாருப்பா அது என்னை பத்தி பேசுறது. சின்னப்புள்ள தனமா இருக்கு. எப்படியோ எனக்கு ஒரு விளம்பராம். ஹிஹி

    www.sirippupolice.blogspot.com

    ReplyDelete
  34. அந்த பாக்கியராஜ் வகை காமெடி ரசிக்கும்படி இருந்துச்சி... நெனச்சு நெனச்சு சிரிச்சேன்...

    அதே வகையில் இன்னொன்று...

    கணவன்: வரதட்சணையா கொடுக்க வேண்டியதுல இன்னும் ஸ்கூட்டர் மட்டும் பாக்கி இருக்கு..! நாளைக்குள்ள வரலைன நீ உங்க வீட்டுக்கே போய்டு..!
    ( மறுநாள் மனைவி ஸ்கூட்டரோடு வந்தாள்.)
    கணவன்: ஸ்கூட்டர் நல்லா குதிரை மாதிரி ஜம்முனு இருக்குடி..!
    மனைவி: நேத்து நைட் ஸ்கூட்டருக்கு சொந்தகாரனும் இதே தான் சொன்னான்..!!!

    ReplyDelete
  35. senthamizh valarpom. continue the good work
    posted in http://nammaarea.com/tamizh/tamizh-one-minute-story-1/

    ReplyDelete
  36. எல்லாத்தையும் படிச்சி ரசிச்சேன் ஆனா அந்த கடைசி பாராவை படிக்காமா போயிருக்கனும் அதையும் அதே ஆவல்ல படிச்சது தப்பா போயிடுச்சி.

    ReplyDelete