இரண்டு குழந்தைகளுக்கு
பள்ளி பருவத்தை தொட்டிருக்கும் மூத்தவன்
மழலை பருவத்தை எட்டி பார்க்கும் இளையவன்...
தூக்கம் முழுதாக கலையவில்லை
அலாரம் எழுப்புகிறது
இயந்திரமாய் பல் துலக்கி
அரைகுறையாய் குளித்து
ஓடுகிறேன் சமையல் அறைக்கு .
பதம் பார்த்து சமைக்கிறேன்
மூத்தவனுக்கு பிடித்ததை ...
ஒரு வழியாக சமையல், வீட்டுபாடம் , காலை உணவு என்று
அத்தனையும் முடித்து
அவசரமாக அவனை கிளப்புகிறேன்
பள்ளிக்கு. ..
நானும் கிளம்பனும் அலுவலகத்திற்கு
அவரசரமாய் திரும்புகையில்
என்னை பார்த்து சிரிக்கிறான் இளையவன் ..
புதிதாய் பூக்கும் பூவை போல்
அவனது கண்கள் மெல்ல திறக்க …
அவனுக்கே உரிய மழலையில் ‘அம்மா ’..’அம்மா ’ என்றழைக்க ..
என்னவென்று சொல்வேன் .…அந்த பேரின்பத்தை..
மனம் துள்ளி குதிக்கிறது ..
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்
என்னை அழைக்கச் சொல்லி ….
மிக்க ஆசை
அவன் மழலை கேட்க
நேரம் இல்லை
கடிகார முள் 8 தொட்டது
சிறிய முத்தம் மட்டும்
கொடுத்துவிட்டு கிளம்பினேன். குறையவே இல்லை ..
மனசு முழுக்க பிஞ்சு மழலையே
சுற்றி கொண்டிருக்க ..
அலுவலகத்தில் நான் .
நுனி நாக்கு ஆங்கிலம்
கம்ப்யூட்டர் , டார்கெட் ..
எல்லாமே வசப்பட்டுவிட்டது ..
இந்த அலுவலக வாழ்கையில் ...
இதோ ஆசையோடு எதிர்பார்த்த ..
மாலை நேரம் வருகிறது ..
வீட்டுக்கு கிளம்ப வேண்டும் …
கிளம்பையில் வருகிறது ஒரு ஈமெயில் ..
ப்ரோபோசல் வேண்டுமென்றும் …
மிகவும் அவசரம் என்றும் .
ஒரு வழியாக எல்லாம் முடித்துக்கொண்டு
வீட்டுக்கு வருகிறேன் ஆர்வத்துடன் ..
மழலை மொழி கேட்டு ரசிப்பதற்கு ..
வருவதற்குள் தூங்கியே விட்டான் ..
பக்கத்தில் படுத்தேன் ..
அவனை தழுவிக்கொண்டே...
என் கண்களும் உறங்கின
வழியும் கண்ணீரோடு ..
இதயமோ விழித்திருந்தது ..
ஏக்கத்தில்!
இயந்திரத்தனமாகி போய் விட்ட இன்றைய சூழலில், ஒரு தாயின் ஏக்கத்தை மிகவும் யதார்த்தமாக சொல்லிருக்கிறீர்கள். இது உங்களின் ஏக்கம் மட்டுமல்ல. உங்களைப் போன்ற பல தாய்களின் ஏக்கம். இதனை படிக்கும் ஒவ்வொரு தாய்க்கும், தெரியாமல்(பணி நிமத்தமாக) செய்கிற இந்த தவறினை திருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
ReplyDeleteஉங்களின் சிந்தனைகள் மேல் மேலும் வளர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
நட்புடன்,
ஜெய்.
தொடுடீங்க அஷித்தா....
ReplyDeleteகவிதை சூப்பர்...
ஆனா மனசு தான் கொஞ்சம் கஷ்டபடுது...
உங்க ஏக்கத நினச்சு ....
God futureல எனக்கு இந்த ஏக்கம் வந்துட கூடாது...
நன்றி ஜெயபாலன் ...நன்றி நிவி...
ReplyDeleteமனசு வலிக்குது,அழாதீங்க அஷிதா,
ReplyDeleteடோன்ட் வொர்ரி,பீ ஹாப்பி
நல்ல கவிதை அஷிதா.
ReplyDelete:) நல்ல கவிதை. உணர்ச்சிக் குவியல்
ReplyDeleteரொம்ப வேதனையா இருக்குங்க ஆஷிதா... மனசு கனக்குது...
ReplyDeleteஏக்கம்...
ReplyDeleteஉங்களது கவிதையின் தாக்கம்...
மலரட்டும்...
வாழ்த்துக்கள்...